ரோஹித் சர்மா மீண்டும் திரும்புவது கடினம்.. அதுக்கு காரணமும் இருக்கு – ரிக்கி பாண்டிங் கருத்து

Ponting-and-Rohit
- Advertisement -

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஆஸ்திரேலிய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

ரோஹித் சர்மா மீண்டும் வருவது கடினம் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது சிட்னி நகரில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் மோசமான பார்ம் காரணமாக பிளேயிங் லெவனில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகினார். இதன் காரணமாக பும்ராவின் தலைமையில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது.

- Advertisement -

இப்படி திடீரென ரோகித் சர்மா அணியிலிருந்து வெளியேறியது பெரிய அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது அதோடு தற்போது 37 வயதினை எட்டியுள்ள ரோகித் சர்மா இனியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மாட்டார் என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ரிக்கி பாண்டிங் கூறுகையில் : சிட்னி போட்டியில் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனெனில் கடந்த சில நாட்களாகவே நடந்து வந்த விஷயங்களை வைத்து அவர் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிந்தது.

- Advertisement -

அதேபோன்று அவருக்கு பதிலாக சுப்மன் கில் உள்ளே வந்ததும், பும்ரா கேப்டன் ஆனதும் நான் எதிர்பார்த்தது தான். என்னை பொறுத்தவரை இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியை விளையாட ஆறு மாதங்கள் வரை ஆகும். எனவே இனி ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு திரும்ப முடியாது என்றே நினைக்கிறேன்.

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இது நடந்தா கம்பீர் வெளியேற வேண்டியது தான் – பி.சி.சி.ஐ சார்பில் தகவல்

அவர் மிகச்சிறந்த வீரர் தான். அதில் எவ்வித மாற்று கருத்தும் இல்லை ஆனாலும் அவரது கரியரின் கடைசி கட்டத்தில் தற்போது ரோஹித் இருக்கிறார். எனவே அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினம் என்று தான் நினைப்பதாக பாண்டிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement