கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரோடு இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் தனது பதவியில் இருந்து விலகினார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீரை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யால் கடந்த ஜூலை 9-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.
கம்பீர் பதவிக்கு வந்திருக்கும் ஆபத்து :
கவுதம் கம்பீரின் தலைமையில் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணியானது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக இலங்கை அணி இடம் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் மீது அப்போதே பெரிய விமர்சனம் எழுந்தது.
அதோடு அதற்கடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரிலும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக கம்பீர் மீது விமர்சனம் இருந்து வருகிறது. இந்நிலையில் பயிற்சியாளர் பதிவிக்கு கம்பீர் முதல் தேர்வு கிடையாது என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான முதல் தேர்வு கம்பீர் கிடையாது. குறிப்பிட்ட மூன்று வெளிநாட்டில் பயிற்சியாளர்கள் தான் எங்களது முதல் தேர்வாக இருந்தனர். அவர்களில் ஒருவரை நியமிக்க விருப்பம் பிசிசிஐக்கு இருந்தது. ஆனால் கம்பீர் சமரசம் செய்து இந்த பதிவை வாங்கினார்.
இதையும் படிங்க : 181க்கு ஆல் அவுட்.. ஆஸியை மீண்டும் தெறிக்க விட்ட இந்தியா.. மருத்துவமனைக்கு சென்ற பும்ரா.. மீண்டும் விளையாடுவாரா?
ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பலை சந்தித்துள்ள கம்பீர் சாம்பியன் டிராபியிலும் அதே நிலையை சந்தித்தால் அவரது பயிற்சியாளர் பதவிக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



