181க்கு ஆல் அவுட்.. ஆஸியை மீண்டும் தெறிக்க விட்ட இந்தியா.. மருத்துவமனைக்கு சென்ற பும்ரா.. மீண்டும் விளையாடுவாரா?

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 185 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஸ்காட் போலண்ட் 4 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜாவை 2 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த லபுஸ்ஷேனை 2 ரன்களில் காலி செய்தார். அதற்கடுத்ததாக வந்த தொல்லை நாயகன் டிராவிஸ் ஹெட்டை 4 ரன்களில் அவுட்டாக்கிய சிராஜ் மறுபுறம் சவாலை கொடுத்த சாம் கோன்ஸ்டஸை 23 ரன்களில் அவுட்டாக்கி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்தியா அபாரம்:

அதேபோல மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த ஸ்டீவ் ஸ்மித் 33 ரன்கள் எடுத்து போது பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அவுட்டானார். அதோடு நிற்காத கிருஷ்ணா அடுத்ததாக வந்த அலெக்ஸ் கேரியை 21 ரன்களில் போல்ட்டாக்கி மறுபுறம் நிதானமாக விளையாடிய வெப்ஸ்டரை 57 ரன்களில் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்த கேப்டன் கமின்ஸ் 10, ஸ்டார்க் 1 ரன்னில் நித்திஷ் ரெட்டி வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

இறுதியில் நேதன் லயன் 7*, போலண்ட் 9 ரன்கள் எடுத்தும் ஆஸ்திரேலியாவை 181 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட்டாகி தெறிக்க விட்டது. குறிப்பாக நேற்று மாலை துவங்கிய இந்தியா இரண்டாவது நாள் தேநீர் இடைவெளிக்குள் ஆஸ்திரேலியாவை சுருட்டி வீசியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியாவுக்கு கேப்டன் பும்ரா 2, நித்திஷ் ரெட்டி 2, முகமது சிராஜ் 3, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

- Advertisement -

பும்ரா வருவாரா:

அந்த வகையில் ரோஹித் சர்மா தலைமையில் திணறிய இந்தியா பும்ரா தலைமையில் மீண்டும் சிறப்பாக செயல்பட துவங்கியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. ஆனால் அவர் லேசான தசை பிடிப்பு காரணமாக பாதியிலேயே விலகினார். அத்துடன் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக அவர் மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இதையும் படிங்க: 5 மாசம்.. கேரியர் முடிஞ்ச்சுன்னு நினைக்காதீங்க.. 5வது டெஸ்டில் விலகியது ஏன்? ரோஹித் விளக்கம்

எனவே அவர் இந்த போட்டியில் தொடர்ந்து விளையாடுவாரா என்பது கேள்வியாகும். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் லேசான காயம் மட்டுமே முதல் பார்வையில் தெரிந்தது. அதனால் அவர் இந்தியாவுக்காக விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இதைத் தொடர்ந்து நான்கு ரன்கள் முன்னிலையுடன் மீண்டும் பேட்டிங் செய்யும் இந்தியா பெரிய இலக்கை நிர்ணயிக்கும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது

Advertisement