ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 4வது போட்டியில் 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் பின் தங்கியுள்ள இந்தியா 2014க்குப்பின் பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது. மேலும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இந்தியா இழந்துள்ளது.
அந்த தோல்விக்கு சீனியர்களாக அசத்த வேண்டிய விராட் கோலி, ரோஹித் சர்மா சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. அதில் விராட் கோலி இவ்வளவு அனுபவத்தை கொண்டிருந்தும் தொடர்ந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் வலையில் விழுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி அசத்துவது என்று தெரியாமல் திணறுகிறார்.
ஓய்வு எப்போது:
சமீபத்தில் 3 – 0 (3) என்ற கணக்கில் அவருடைய தலைமையில் இந்தியா சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அதனால் அந்த இருவருமே ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளார்கள். இந்நிலையில் 36 வயதில் நல்ல ஃபிட்னஸ் கொண்டுள்ள விராட் கோலி இன்னும் சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட தகுதியுடையவர் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஆனால் ரோஹித் சர்மா பேட்டிங்கில் தன்னுடைய கால்களை கூட சரியாக நகர்த்த முடியாமல் திணறுவதால் ஓய்வு பெறலாம் என்று சாஸ்திரி கூறியுள்ளார். இதுப் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி இன்னும் சில காலம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அவுட்டாகும் விதத்தை மறந்து விடுங்கள். அதையும் தாண்டி இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாட முடியும்”
சாஸ்திரி அறிவுரை:
“ஆனால் ரோகித் சர்மா கவலைக்குரியவராக இருக்கிறார். எனவே ஓய்வு என்பது அவருடைய முடிவு. ஏனெனில் டாப் ஆர்டரில் விளையாடும் அவரின் ஃபுட் ஒர்க் அதே போல இல்லை. அதனால் அவர் பந்தை மிகவும் தாமதமாக எதிர்கொள்கிறார். எனவே இந்தத் தொடரின் முடிவில் ஓய்வு அறிவிக்கும் முடிவை எடுப்பது அவருடைய முடிவு” என்று கூறினார்.
இதையும் படிங்க: ரோஹித் மற்றும் கோலி செய்யும் தவறு இதுதான்.. அதை மாத்திக்கனும் – முகமது அசாருதீன் அட்வைஸ்
அதே நிகழ்ச்சியில் டான் ப்ராட்மேன் கூட அவுட் சைட் பந்துகளில் தடுமாறியதாக முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க் நிக்கோலஸ் கூறினார். எனவே விராட் கோலி இன்னும் சில வருடங்கள் விளையாடுவதற்கு தகுதியானவர் என்றும் அவர் தெரிவித்தார். மொத்தத்தில் இந்தத் தொடரின் முடிவில் ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற வாய்ப்புள்ளது குறிப்பிடப்பட்டது.



