கும்ளே மற்றும் ஹர்பஜன் ஆகியோரை தொடர்ந்து நிதீஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ

Nitish-and-Sundar
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 116 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

சாதனை நிகழ்த்திய நிதீஷ் மற்றும் சுந்தர் ஜோடி :

மூன்றாம் நாளான இன்று இந்திய அணி ஆல் அவுட்டாகாமல் இறுதிவரை போராடியது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பாராட்டினை பெற்றுள்ளது. இன்றைய நேற்றைய இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களுடன் இருந்தது.

- Advertisement -

இவ்வேளையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் 28 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக இந்திய அணி 221 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்காக தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அதாவது இந்த போட்டியில் எட்டாவது வீரராக நிதீஷ் குமாரும், ஒன்பதாவது வீரராக வாஷிங்டன் சுந்தரும் விளையாடிய வேளையில் இருவருமே அரைசதம் கடந்தனர்.

- Advertisement -

குறிப்பாக வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், நிதீஷ் ரெட்டி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 176 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 105 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இப்படி எட்டாவது மற்றும் ஒன்பதாவது வீரர்கள் ஆஸ்திரேலிய மண்ணில் அரைசதம் அடிப்பது இது இரண்டாவது முறை.

இதையும் படிங்க : கொஞ்சம் பதட்டமாயிட்டேன்.. இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது – நிதீஷ் ரெட்டியின் தந்தை நெகிழ்ச்சி

இதற்கு முன்னதாக கடந்த 2008 ஆம் ஆண்டு அடிலெய்டில் நடந்த போட்டியில் போது அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் 8 மற்றும் 9-ஆவது இடங்களில் களமிறங்கி அரைசதம் அடித்திருந்த வேளையில் அவர்களுக்கு அடுத்ததாக தற்போது நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டர் சுந்தர் ஆகியோரது ஜோடி இந்த சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement