கொஞ்சம் பதட்டமாயிட்டேன்.. இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது – நிதீஷ் ரெட்டியின் தந்தை நெகிழ்ச்சி

Mutyala-Reddy
- Advertisement -

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நடப்பு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று முடிவடைந்த வேளையில் இந்திய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது.

இந்த நாளை என் வாழ்நாளில் மறக்க முடியாது :

இதன் மூலம் 116 ரன்கள் பின்தங்கியுடன் நிலையுடன் நாளைய நான்காம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இந்திய அணியின் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே உள்ளதால் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட 100 ரன்கள் முன்னிலை பெறவும் வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்த நிலையை எட்டும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைய போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் ரெட்டி 105 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். அதேபோன்று தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் குவித்தார்.

ஒரு இந்த போட்டியின் ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்ததும் ஜஸ்ப்ரீத் பும்ராவும் டக் அவுட்டாகியிருந்தார். அப்போது நிதீஷ்குமார் 99 ரன்களில் இருந்ததால் அவர் சதம் அடிப்பாரா? மாட்டாரா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சிராஜ் சுதாரித்ததால் நிதீஷ் ரெட்டியால் தனது முதல் டெஸ்ட் சதம் அடிக்க முடிந்தது.

- Advertisement -

இந்நிலையில் இந்த “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியில் தனது மகன் அடித்த சதம் குறித்து மைதானத்தில் இருந்த அவரது தந்தை கூறியதாவது : உண்மையிலேயே எங்களது குடும்பத்திற்கு இன்று ஒரு மறக்க முடியாத நாள். ஏனெனில் ஒரு முக்கியமான நாளில் இந்த சதம் வந்துள்ளது. என்னுடைய மகன் 14-15 வயதிலிருந்து விளையாடி வருகிறார். தற்போது சர்வதேச அளவில் அவர் இப்படி ஒரு சதத்தை அடிக்கும் போது உண்மையிலேயே அது ஸ்பெஷலாக இருக்கிறது.

இதையும் படிங்க : மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போக வழி இருக்கா? – விவரம் இதோ

99 ரன்களில் நிதீஷ் இருந்தபோது பும்ரா விக்கெட் விழுந்ததால் சற்று பதட்டம் அடைந்து விட்டேன். ஆனால் சிராஜ் சுதாரித்து என் மகனை சதம் அடிக்க வழி கொடுத்திருக்கிறார் என நிதீஷ் ரெட்டியின் தந்தை மகிழ்ச்சியுடன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement