மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் சாம்பியன்ஷிப் பைனலுக்கு போக வழி இருக்கா? – விவரம் இதோ

WTC
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மோசமான கட்டத்தை எட்டியிருந்தது. நடைபெற்று வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மூன்று அல்லது நான்கு வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி என்ன செய்ய வேண்டும்? :

ஆனால் இங்கு தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றிருந்தது. இதன் காரணமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவிக்க இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகளில் இருந்து 164 ரன்கள் மட்டுமே குவித்திருந்தது. இதன் காரணமாக 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் தற்போது மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது.

ஆதலால் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு இணையாக ரன்குவிக்க முடியுமா அல்லது பாலோ ஆனாகி தோல்வியை சந்தித்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறுமா? என்பது குறித்த பல்வேறு கேள்விகள் அனைவரது மத்தியிலும் உள்ளன.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தால் என்ன நடக்கும்? என்பது குறித்த முழு தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் இந்திய அணி நான்காவது போட்டியில் தோல்வியடைந்து ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு கணக்கில் சமநிலையும். அப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.26 ஆக இருக்கும். ஒருவேளை இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல தகுதி பெறாது.

இதையும் படிங்க : தம்பி 12 வருஷம் பாத்துருக்கேன்.. 6 – 7 முறை.. சவால் விட்டுள்ள 19 வயது ஆஸி வீரருக்கு பும்ரா கூலான பதில்

இந்த தொடரானது சமநிலையில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். அப்படி இல்லையெனில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும். இப்படி இந்திய அணி மற்ற அணிகளின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement