போட்டியின் இரண்டாம் நாளில் இந்திய வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட என்ன காரணம்? – விவரம் இதோ

Arm-Band
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி மற்றும் டிரா என இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

கருப்பு பட்டை அணிந்து விளையாடிய இந்திய வீரர்கள் :

அதனை தொடர்ந்து நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 26-ஆம் தேதியான நேற்று மெல்போர்ன் மைதானத்தில் துவங்கிய இந்த “பாக்ஸிங் டே” டெஸ்ட் போட்டியானது இரண்டாவது நாளை பூர்த்தி செய்துள்ளது.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்துள்ளது இதன் காரணமாக 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான இன்று இந்திய அணியின் வீரர்கள் கையில் கருப்பு பட்டையுடன் விளையாடியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது. அதற்கு காரணம் என்ன? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் பொதுவாகவே இந்தியாவில் இருக்கும் பெரிய பிரபலங்கள், முக்கிய நபர்கள், அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் போன்றோர்களது இறப்பு ஏற்பட்டால் இந்திய அணி கருப்பு பட்டை அணிந்து விளையாடுவது வழக்கம். அந்த வகையில் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் மறைவை முன்னிட்டு அவரது இறப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் கருப்பு பட்டையை அணிந்து விளையாடி இருந்தனர்.

இதையும் படிங்க : இன்னும் நிறைய இருக்கு வெயிட் பண்ணுங்க.. நான் வித்தையை காட்டுறேன் – வாஷிங்டன் சுந்தர் அதிரடி

கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இரு முறை இந்தியாவின் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் 92 வயதில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவரது மறைவை ஒட்டி அந்த துக்கத்தை அனுசரிக்கும் விதமாகவே இந்திய அணி இந்த மரியாதையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement