இன்னும் நிறைய இருக்கு வெயிட் பண்ணுங்க.. நான் வித்தையை காட்டுறேன் – வாஷிங்டன் சுந்தர் அதிரடி

Washington-Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் மைதானத்தில் நேற்று டிசம்பர் 26-ஆம் தேதி துவங்கிய நான்காவது “பாக்சிங் டே” டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்து பலமான நிலையில் உள்ளது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மூன்றாம் நாள் எங்களோட பலத்தை காட்டுவோம் :

பின்னர் ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோரது அசத்தலான ஆட்டம் காரணமாக சுதாரித்த இந்திய அணி நல்ல ரன் குவிப்பை நோக்கி நகர்ந்தது. ஆனால் இந்த ஜோடி 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த வேளையில் துரதிஷ்டவசமாக 82 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

- Advertisement -

அதன் பின்னர் அதற்கடுத்த ஒரு ஓவரில் விராட் கோலி 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேற அவருக்கு பின்னர் ஆகாஷ் தீப்பும் ஆட்டமிழந்தார். இப்படி போட்டி முடிய கடைசி சில ஓவர்கள் இருந்த நிலையில் மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் இந்திய அணி பெரிய சரிவை சந்தித்தது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்திருக்கும் நிலையில் 310 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ரிஷப் பண்ட் 6 ரன்களுடனும், ஜடேஜா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் நாளை நடைபெற இருக்கும் மூன்றாவது நாளில் இந்திய அணி பாலோ ஆனை கடந்து ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரை கிட்டத்தட்ட எட்டும் அளவிற்கு செல்ல வேண்டுமெனில் இனிவரும் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்.

- Advertisement -

இந்நிலையில் நாளைய மூன்றாம் நாளில் விளையாட இருக்கும் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் கூறுகையில் : இந்திய அணி என்னிடம் இருந்து சிறந்த விடயங்களை எதிர்பார்க்கிறது. என்னால் மூன்று வகையான துறையிலும் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும். அதனால் பேட்டிங்கிலும் நாளை நிச்சயம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அணியின் சூழ்நிலை தற்போது சிறப்பாக இருக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலி செய்த தவறால் சதம் அடிக்காமல் ஏமாற்றத்துடன் வெளியேறிய ஜெய்ஸ்வால் – என்ன நடந்தது?

நாங்கள் முழு எனர்ஜியுடன் விளையாட காத்திருக்கிறோம். இன்னும் மூன்று நாட்கள் முழுவதுமாக உள்ளன. எனவே நிச்சயம் அணிக்கு தேவையான விடயங்களை செய்து நாங்கள் நமது அணியை வலுப்படுத்துவோம். நாளை நிச்சயம் பேட்டிங்கிற்கு ஆடுகளம் சாதகமாக செயல்படும் என்பதால் நல்ல ரன் குவிப்பை வழங்குவோம் என வாஷிங்டன் சுந்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement