விராட் கோலியை அப்படி சொன்னது தவறு தான் மன்னிச்சுடுங்க.. 75 வயதாகும் முன்னாள் ஆஸி வீரர் வருத்தம்

Kerry OKeefee
- Advertisement -

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியிலும் இந்திய அணி தடுமாற்றமாக விளையாடி வருகிறது. முன்னதாக அந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக 19 வயதாகும் இளம் வீரர் ஷாம் கோன்ஸ்டஸ் அறிமுகமாகி அட்டகாசமாக விளையாடி 65 ரன்கள் குவித்தார்.

மேலும் பும்ராவுக்கு எதிராக 3 வருடங்கள் கழித்து சிக்ஸர் அடித்த வீரர் மற்றும் ஒரே ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர் ஆகிய சாதனைகளையும் அவர் படைத்தார். அத்துடன் ஆஸ்திரேலியாவுக்காக இரண்டாவது இளம் வயதில் அரை சதமடித்த வீரர் என்ற சாதனையும் கோன்ஸ்டஸ் படைத்தார். அப்படிப்பட்ட அவரது தோளில் விராட் கோலி இடித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

மன்னிப்பு கேட்பு:

குறிப்பாக 19 வயதாகும் அவரிடம் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் விராட் கோலி இப்படி நடந்து கொள்ளலாமா? என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் விமர்சித்தார்கள். அதே போல மைதானத்தில் இருந்த ஆஸ்திரேலிய ரசிகர்கள் இதுவரை விராட் கோலிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டுமின்றி விராட் கோலியை கோமாளி போல ஆஸ்திரேலிய ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.

இதற்கிடையே முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கேரி ஓ’கீபி நேரலையில் விமர்சித்தது பின்வருமாறு. “விராட் கோலி தனது மொத்த கேரியரையும் ஆணவத்தின் மீது கட்டமைத்துள்ளார். அதனாலேயே திடீரென்று அவர் அறிமுகம் வீரரிடம் இப்படி கோபமடைந்தார்” என்று கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் அவ்வாறு தாம் பேசியது தவறு என்று ஓ’கீபி மன்னிப்பு கேட்டுள்ளார்.

- Advertisement -

சரிவில் விராட் கோலி:

இது பற்றி 75 வயதாகும் அவர் 2வது நாளின் நேரலை வர்ணனையில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலியின் நடத்தையை ஆணவம் என்று கூறியதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். நான் அப்படி சொல்லியிருக்கக் கூடாது. ஏனெனில் அதிரடியான குணத்தைப் பெற்ற அவர் தன்னுடைய கிரிக்கெட்டை அப்படித்தான் விளையாடுகிறார். அப்படிப்பட்ட அவர் மற்றொருவர் அதே பாணியில் நடந்து கொண்டது பார்த்ததால் கோபமடைந்து பதிலளித்தார் என்று நினைக்கிறேன்”

இதையும் படிங்க: என்ன கொடுமைடா இது.. ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள சோகம் – விவரம் இதோ

“விராட் கோலி ஆர்வமுள்ள வீரர் மற்றும் அவருடைய ஆக்ரோஷம் தான் அவரைப் போட்டி மிகுந்த வீரராக மாற்றுகிறது” என்று கூறினார். மொத்தத்தில் கிங் என்று விராட் கோலியை அழைத்து ஆஸ்திரேலியர்கள் தற்போது விமர்சித்து வருகிறார்கள். சர்ச்சையை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்காக விராட் கோலிக்கு 20% போட்டி சம்பளத்தை ஐசிசி அபராதமாக விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement