இந்திய அணி அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற கையோடு விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் கடந்த சில தொடர்களாகவே சற்று தடுமாற்றத்தை சந்தித்து வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி அளிக்கும் விதமாக தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலிக்கு ஏற்பட்டுள்ள சோகம் :
அந்த வகையிலேயே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடரின் முதல் போட்டியின் போது முதல் இன்னிங்சில் டக் அவுட்டாகியிருந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸின் போது சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள தொடரிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாற்றத்தை சந்தித்திருந்தார்.
இதன் காரணமாக மெல்போர்னில் நடைபெறும் நான்காவது போட்டி அவருக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக “பாக்சிங் டே” டெஸ்ட் போட்டியாக நடைபெற்று வரும் இந்த நான்காவது போட்டியில் முதல் இன்னிங்சில் 86 பந்துகளை சந்தித்த அவர் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு கூடுதலாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் போட்டிகளில் எல்லாம் விராட் கோலி ஒரே மாதிரியான வகையில் ஆட்டமிழந்து வருவது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்தது.
அதனைத்தொடர்ந்து இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்து 310 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது 86 பந்துகளை சந்தித்த விராட் கோலி ஸ்காட் போலந்து பந்துவீச்சில் 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வேளையில் மீண்டும் ஒருமுறை அவரது பந்துவீச்சில் ஆட்டமிழந்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : எவ்வளவு தூரம் இருந்தாலும் நீ நல்லா இருக்கனும்.. மகனுக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்த – ஷிகார் தவான்
அதோடு ஆஸ்திரேலியா மண்ணில் அவருக்கு தொடரும் சோகம் யாதெனில் : இதுவரை அவர் ஆஸ்திரேலிய மண்ணில் 27 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரே ஒருமுறை மட்டும் தான் ரன் அவுட்டாகியுள்ளார். மற்ற அனைத்து முறையும் அதாவது 26 முறையும் கேட்ச் மூலமாகவே அவர் ஆட்டமிழந்துள்ளார் என்ற மோசமான புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.



