எவ்வளவு தூரம் இருந்தாலும் நீ நல்லா இருக்கனும்.. மகனுக்கு மனப்பூர்வமாக வாழ்த்து தெரிவித்த – ஷிகார் தவான்

Shikhar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஷிகர் தவான் கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2021-ஆம் ஆண்டு வரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அது தவிர்த்து கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் 222 ஆட்டங்கள் என அனைத்து வகையான போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

என் அன்பு மகனே நீ நல்லா இருக்கனும் :

சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட மாட்டேன் என்று அறிவித்ததால் தற்போது உலக லெஜென்ட்ஸ் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் தனது மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஒரு தகவல் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆயிஷா முகர்ஜி என்பவரை திருமணம் செய்து கொண்ட ஷிகர் தவானுக்கு பத்து வயதில் ஸோரோவர் தவான் என்கிற மகன் உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷிகர் தவான் மற்றும் ஆயிஷா முகர்ஜி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதால் அவரது மகன் தற்போது தனது தாயுடன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தனது மகனை நேரில் சந்திக்க முடியாமலும், தொலைபேசியில் பேச முடியாமலும் தவித்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் தவான் தற்போது தனது மகனின் பத்தாவது பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ஒரு கருத்தில் : என்னால் பேச முடியாத நிலையில் நீ இருந்தாலும், நீ எவ்வளவு தொலைவில் இருந்தாலும் எப்போதுமே என்னுடைய இதயத்தில் தான் இருக்கிறாய். இந்த பிறந்தநாளில் உனக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிரம்பட்டும். என் அன்பு மகனே என்று தவான் வாழ்த்து கூறுயுள்ளார்.

இதையும் படிங்க : 5 இன்னிங்சில் 3 ஆவது முறை.. விராட் கோலிக்கு எமனாய் மாறிய ஆஸ்திரேலிய பவுலர் – என்ன நடந்தது?

அவரது இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பெற்ற மகனையே பார்க்க முடியாமல் தவித்து வரும் ஷிகர் தவான் அடுத்ததாக எந்த பெண்ணையும் இதுவரை திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement