ஆர்.சி.பி அணியில் அந்த வாய்ப்பு கெடச்சா அதை கண்டிப்பா ஏத்துக்குவேன் – ராஜத் பட்டிதார் ஓபன்டாக்

Patidar
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி அடுத்த மூன்று ஆண்டுகளுக்காக சரியான பேலன்ஸ் உடைய வீரர்களை தேர்வு செய்து தங்களது அணியை பலப்படுத்தியுள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.

அந்த வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப ஹேப்பி தான் :

ஏனெனில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை பெங்களூரு அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் அந்த அணிக்கு இருக்கும் ஆதரவு என்றுமே குறைந்தது கிடையாது. ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்றாலும் சென்னை, மும்பை ஆகிய அணிகளுக்கு நிகரான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட அணியாக பெங்களூரு அணி திகழ்ந்து வருகிறது.

- Advertisement -

எத்தனையோ கேப்டன்கள் மாறினாலும் அந்த அணியால் இதுவரை கோப்பையை மட்டும் கைப்பற்ற முடியவில்லை. பெங்களூரு அணியில் ஆரம்பத்தில் இருந்து விளையாடி வரும் விராட் கோலி அந்த அணியின் மிகப்பெரிய சொத்தாக இருந்து வருகிறார். அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக டூப்ளிசிஸ்ஸை அந்த அணி கழட்டிவிட்டுள்ளதால் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஆனால் ஏற்கனவே விராட் கோலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன்சி பதிவியை நிராகரித்து விட்டு துவக்க வீரராகவே விளையாடி வருகிறார். எனவே அடுத்த சீசனில் ராஜத் பட்டிதார் அந்த அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு தகவல் அண்மையில் அனைவரது மத்தியிலும் பகிரப்பட்டிருந்தது. இந்நிலையில் தனக்கு ஆர்சிபி அணியின் கேப்டன் பதவி வந்தால் அதனை ஏற்று மகிழ்ச்சியுடன் பெங்களூரு அணியை வழிநடத்துவேன் என்று ராஜத் பட்டிதார் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆர்.சி.பி அணியை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அதை முழுமனதாக ஏற்க தயாராக இருக்கிறேன். இருந்தாலும் அந்த முடிவு உரிமையாளர்களின் கைகளில் தான் இருக்கிறது. அவர்கள் மனது வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும். என்னை பொறுத்தவரை பெங்களூரு அணியின் வெற்றிக்காக நான் எப்போதுமே என்னுடைய பங்களிப்பை முழுவதுமாக அளிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஸ்கூப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்லாம் ஆட இதுதான் காரணம் – ரிஷப் பண்ட்

மேலும் இந்திய டெஸ்ட் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்பினை ரசித்ததாகவும், சில போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் தனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதாகவும் இருந்தாலும் விரைவில் தான் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் நேரத்திற்காக காத்திருக்கிறேன் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement