டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் ஸ்கூப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்லாம் ஆட இதுதான் காரணம் – ரிஷப் பண்ட்

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை காட்டிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக இந்திய டெஸ்ட் அணிக்காக கடந்த 2018-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 40 போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 14 அரைசதம் என 2780 ரன்களை குவித்துள்ளார்.

தனியா பிராக்டீஸ்லாம் பண்ண மாட்டேன் :

அதிலும் குறிப்பாக இதுவரை இந்திய அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை விட மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு மட்டுமின்றி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலத்தையும் அளிக்கிறார். அவரது பேட்டிங் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் வலுவான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

- Advertisement -

அதோடு தற்போது 27 வயதாகும் அவர் இன்னும் நீண்ட காலம் மிக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும் என்பதால் அவரே நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இடம்பிடித்து விளையாடுவார் என்றும் தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய அவர் மீண்டும் சர்வதேச போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் இருந்தது.

ஆனால் காயத்திலிருந்து மீண்ட அவர் மிகச்சிறப்பாக கம்பேக் கொடுத்து அண்மையில் நடைபெற்று முடிந்த சில தொடர்களிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ரிஷப் பண்ட் முதல் இரண்டு போட்டிகளிலும் பெரியளவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் எஞ்சியுள்ள தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அந்த வகையில் காபா நகரில் இன்று துவங்கி நடைபெற்று வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தான் அங்கு விளையாடியதையும், தனது வித்தியாசமான ஷாட் தேர்வுகள் குறித்தும் பேசியுள்ள ரிஷப் பண்ட் கூறுகையில் : நான் எப்போதுமே ரிவர்ஸ் ஸ்கூப், ஸ்வீப் ஷாட் போன்ற வித்தியாசமான ஷாட்கள் விளையாடுவது குறித்து பிரத்யேகமாக எந்த பயிற்சியினையும் செய்வது கிடையாது. போட்டியின் போது என்னுடைய திட்டத்தை வகுத்து பவுலர்களுக்கு எதிராக வித்தியாசமாக ஷாட்டுகளை விளையாட வேண்டும் என்று திட்டமிடுவேன்.

இதையும் படிங்க : ஐசிசி பணத்துக்கு சாஞ்சுட்டாங்க.. பாகிஸ்தானுக்கும் மரியாதை இருக்கு.. இந்தியாவுக்கு பதிலடி கொடுங்க.. ஃஅப்ரிடி

ஏனெனில் எப்பொழுதுமே ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக தொடர்ச்சியாக டிபன்ஸ் செய்வது கடினம். அப்படி சற்று கடினப்படும் வேளையில் அந்த நேரத்தில் அதிரடியாக விளையாட வேண்டும். அந்த மனநிலையில் தான் நான் வித்தியாசமான ஷாட்களை முயற்சி செய்வேன். அது எனக்கு இயல்பாக இருக்கும் திறமை என்பதனால் அது பலிக்கிறது என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement