ஐசிசி பணத்துக்கு சாஞ்சுட்டாங்க.. பாகிஸ்தானுக்கும் மரியாதை இருக்கு.. இந்தியாவுக்கு பதிலடி கொடுங்க.. ஃஅப்ரிடி

Shaheen Afridi
- Advertisement -

பாகிஸ்தானில் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்து வருவதால் அட்டவணை வெளியாவதில் தாமதம் நிலவுகிறது. 2008க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்வதை நிறுத்தியுள்ள இந்தியா 2023 ஆசியக் கோப்பையில் தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது.

அதே போல இம்முறையும் தங்களுடைய சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. இதற்கிடையே பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார். அதன் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று இந்தியா கண்டிப்பாக விளையாடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அப்ரிடி விமர்சனம்:

அதே காரணத்தால் இந்தியா சொன்னது போல சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த பாகிஸ்தான் வாரியமும் வேறு வழியின்றி சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் கிரிக்கெட்டை விட ஐசிசி பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தியாவின் பக்கம் சாய்வதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி விமர்சித்துள்ளார். மேலும் தங்கள் நாட்டுக்கு வராத இந்தியாவுக்கு வருங்காலங்களில் பாகிஸ்தான் அணியை அனுப்பக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

குறிப்பாக பாகிஸ்தான் வாரியம் தங்களுடைய சுயமரியாதை, கொள்கை ஆகியவற்றை பின்பற்றி இந்த விவகாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் கிரிக்கெட் வலுவானதாகவும் தன்னிறைவு பெற்றதாகவும் இருக்க வேண்டும். மற்றும் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டும்”

- Advertisement -

இந்தியாவுக்கு போகாதீங்க:

“பாகிஸ்தானில் வந்து இந்தியா விளையாடாவில்லை நம்முடைய அணியையும் அவர்கள் நாட்டுக்கு சென்று விளையாட வைப்பதில் எந்த காரணமும் இல்லை. சொல்லப்போனால் ஐசிசியும் தற்போது ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் கிரிக்கெட்டில் விளையாடுவதை உறுதி செய்வதா அல்லது பணம் சம்பாதிக்க விரும்புகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்”

இதையும் படிங்க: 

“ஷாஹீன் அப்ரிடி பாகிஸ்தான் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும் முகமது ரிஸ்வான் கேப்டனாக செயல்பட வேண்டும் என்று நான் கூறியிருந்தேன். ஆனால் அதையும் தாண்டி அவரை கேப்டனாக நியமித்த பாகிஸ்தான் வாரியம் ஒரு தொடருடன் அதிரடியாக நீக்கியது. அது ஷாஹீன் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

Advertisement