விராட் கோலி எப்போவுமே சச்சின் டெண்டுல்கரை மிஞ்ச முடியாது.. ஏன் தெரியுமா? – சோயிப் அக்தர் கருத்து

Akhtar
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தற்போதைய உலகில் தலைசிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படுபவர் விராட் கோலி. டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வை அறிவித்த அவர் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். 36 வயதாகும் அவர் இன்னும் சில ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

சச்சினை விராட் கோலியால் மிஞ்ச முடியாது :

ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவது உண்டு. அந்த வகையில் நவீன காலத்தில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்ந்து வரும் வேளையில் அடுத்த தலைமுறை வீரர்கள் ஆதிக்கத்தை செலுத்த தயாராகிவிட்டனர்.

- Advertisement -

ஆனாலும் விராட் கோலியின் இடத்தை எந்த வீரர் நிரப்பப்போகிறார் என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டின் ஆல்டைம் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் யார்? என்ற விவாதங்களில் விராட் கோலியின் பெயர் அடிபடுகிறது. இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கரையே விராட் கோலி மிஞ்சும் அளவிற்கு சிறப்பானவர் என்று சிலர் பேசி வருகின்றனர்.

ஆனால் சச்சின் டெண்டுல்கரை ஈடு செய்யும் அளவிற்கு விராட் கோலி பெரிய பேட்ஸ்மேன் கிடையாது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சச்சினை விட விராட் கோலி பெரிய வீரர் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. எப்பொழுதுமே நான் சச்சினை தான் மிகச் சிறந்த வீரர் என்று கூறுவேன்.

- Advertisement -

விராட் கோலி மிகச் சிறப்பான வீரர் தான். ஆனாலும் ஒருபோதும் அவரால் சச்சினை மிஞ்ச முடியாது இது விராட் கோலியின் தவறு கிடையாது. ஏனெனில் சச்சின் விளையாடிய காலத்தில் இருந்த தரமான பந்துவீச்சு தற்போது கிடையாது. சச்சின் விளையாடிய காலத்தில் அவர் எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளைச் சேர்ந்த பவுலர்களுமே உலக தரத்தில் திகழ்ந்த பவுலர்கள்.

இதையும் படிங்க : ஆர்.சி.பி அணிக்காக நான் இதை செய்ய ரொம்ப ஆசையா இருக்கு – விருப்பம் தெரிவித்த க்ருனால் பாண்டியா

அதுமட்டுமின்றி அன்றைய காலகட்டத்தில் அப்படி ஒரு ஆட்டத்தை வேறு எந்த வீரரிடம் இருந்தும் எதிர்பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சச்சின் உலக அணிகளை எதிர்த்து தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தற்போது நவீன காலத்தில் இருக்கும் வசதிகளை விட அக்காலத்தில் வசதிகள் குறைவு. அந்த காலத்திலேயே சச்சின் ஆதிக்கத்தை செலுத்தி உள்ளதால் நிச்சயம் எப்போதுமே சச்சின்தான் சிறந்த வீரர் என அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement