இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு ஏலத்தில் தேர்ந்தெடுத்தனர். இதன் காரணமாக அடுத்த ஐபிஎல் தொடருக்கான அனைத்து அணிகளிலும் பல்வேறு வீரர்களின் இடமாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஆர்.சி.பி அணிக்காக விளையாட இருப்பது மகிழ்ச்சி :
இந்த ஏலத்தில் இதுவரை ஐபிஎல் தொடரின் கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றான ஆர்.சி.பி அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்ந்தெடுத்திருந்தது. அந்த வகையில் ஆர்சிபி அணியின் பின் வரிசையில் பேட்டிங் தெரிந்த ஸ்பின்னர் வேண்டும் என்பதற்காக க்ருனால் பாண்டியாவை ஆர்.சி.பி அணி வாங்கியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக எதிராக போட்டி போட்டு இந்திய மதிப்பில் சுமார் 5 கோடி 75 லட்ச ரூபாய்க்கு ஆர்.சி.பி அணி அவரை ஏலத்தில் எடுத்தது. இப்படி இவரை வாங்க காரணம் யாதெனில் : பெங்களூரு மைதானம் இவரது பேட்டிங்கிற்கு ஏற்றவாறு இருக்கும் என்பதனாலும் அந்த மைதானத்தில் நிச்சயம் அவரால் நான்கு ஓவர் பந்துவீச முடியும் என்பதனாலேயே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய அவரை தேர்வு செய்துள்ளது.
இந்நிலையில் லக்னோ அணியில் இருந்து தற்போது பெங்களூர் அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ள அவர் ஆர்.சி.பி அணியில் விளையாட இருப்பது குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது : நம் அனைவருக்கும் விராட் கோலி யார் என்பதும்? அவர் என்ன செய்துள்ளார்? என்பதும் நன்றாக தெரியும். கிரிக்கெட் மீதான அவரது காதல் மற்றும் அவரது ஆக்ரோஷம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அவரது எனர்ஜியும் எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதுமே வெற்றி பெறும் எண்ணம் அதிகம் உள்ள அவரைப் போலவே எனக்கும் வெற்றி பெறும் எண்ணம் அதிகம். களத்தில் என்ன நடந்தாலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க கூடியவன் நான். ஆர்சிபி அணிக்காக இம்முறை விளையாட இருப்பது மிகவும் மகிழ்ச்சி. இதுவரை கோப்பையையே வெல்லாத அந்த அணிக்காக ஒரு முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை என்னிடம் உள்ளது.
இதையும் படிங்க : முதல்நாள் பெய்த மழையால் அடுத்த 4 நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்.. 2 முக்கிய மாற்றங்களின் – விவரம் இதோ
ஆர்.சி.பி அணி இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பதுதான் எனக்கு தற்போது கூடுதல் உத்வேகத்தையும், ஊக்கத்தையும் அளித்துள்ளது. நிச்சயம் ஆர்.சி.பி அணிக்காக கோப்பைகளை வெல்ல வேண்டும் என்பதே எனது விருப்பமாக உள்ளது. ஆர்.சி.பி அணியுடன் இணையும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் என க்ருனால் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.



