உலகெங்கிலும் டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளின் ஆதிக்கும் அதிகரித்து விட்டதால் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஈர்ப்பு ரசிகர்கள் மத்தியில் குறைந்து வந்தது. அந்த நிலையில் தான் டெஸ்ட் போட்டியின் மீதான ஈர்ப்பை மீண்டும் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி-யின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல என்ன வழி? :
அப்படி அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இரண்டு முறை நடைபெற்று முடிந்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்த இரண்டு முறையுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியை சந்தித்து இருந்தது.
இதன் காரணமாக எப்படியாவது இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி விளையாடி வருகிறது. 2023 முதல் 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி கட்டமானது தற்போது நெருங்கி வரும் வேளையில் இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இலங்கை ஆகிய நான்கு அணிகளுக்கு பலத்த போட்டி இருக்கிறது.
குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான அடிலெய்டு டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இந்திய அணிக்கான வாய்ப்பு தற்போது சிக்கலான நிலையை எட்டியுள்ள வேளையில் இன்னும் என்ன செய்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும்? என்ற தகவலை இங்கு பார்க்கலாம்.
அந்த வகையில் இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ள வேளையில் இந்த தொடரினை இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) அல்லது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றினால் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இதையும் படிங்க : அதுக்கான பாராட்டு எடுத்துக்க மாட்டேன்.. என்னோட அட்வைஸ் வெச்சு பும்ரா பெரியாளா வந்துட்டாரு.. மெக்ராத் பேட்டி
ஆனால் இந்திய அணி இன்னும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றால் கூட இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் வெற்றி தோல்விகள் அடிப்படையில் தான் இறுதிப் போட்டிக்கு செல்வது உறுதியாகும். எனவே இந்திய அணி இந்த ஆஸ்திரேலிய தொடரில் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் கூட தோல்வியை சந்திக்காமல் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.



