அதுக்கான பாராட்டு எடுத்துக்க மாட்டேன்.. என்னோட அட்வைஸ் வெச்சு பும்ரா பெரியாளா வந்துட்டாரு.. மெக்ராத் பேட்டி

Glenn Mcgrath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார். 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற அவர் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். தற்போது நடைபெறும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் அபாரமாக பந்து வீசும் அவர் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதனால் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ளார். அதற்கு குறைந்த தூரம் ஓடிவந்து வித்தியாசமாக பந்து வீசும் அவருடைய பவுலிங் ஆக்சன் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவே அவருக்கு காயத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் அவ்வப்போது அமைகிறது.

- Advertisement -

ஆக்சனில் மாற்றம்:

ஏனெனில் குறைந்த தூரம் ஓடிவந்து வித்தியாசமாக வீசும் ஆக்சன் அவருடைய உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் காயத்தை தவிர்த்து பவுலிங் செய்வதற்காக பும்ரா இளம் வயதில் இருந்த போது சென்னையில் இருக்கும் எம்ஆர்எப் பேஸ் பவுண்டேஷனில் தாம் ஆலோசனை கொடுத்ததாக ஜாம்பவான் கிளன் மெக்ராத் கூறியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் அதை அவரால் பின்பற்ற முடியவில்லை என்றும் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி ஏபிசி ஸ்போர்ட் தொலைக்காட்சியில் மெக்ராத் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் இளம் வயதாக இருந்த போது நான் பார்த்துள்ளேன். அப்போதே நல்ல வேகத்தைக் கொண்ட அவருடைய ஆக்சன் முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. குறைந்த தூரம் ஓடிவந்த அவர் வேகமாக குதித்து பந்து வீசினார். அப்போது அவர் கிரீஸ் வழியாக சென்றால் நன்றாக இருக்கும் என்று நான் பரிந்துரைத்தேன்”

- Advertisement -

மெக்ராத் ஆலோசனை:

“ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. பின்னர் அவர் தன்னுடைய முழங்காலில் காயத்தை சந்தித்தார் என்று நினைக்கிறேன். அப்போது அவர் தமக்குத்தாமே க்ரீஸ்க்குள் சென்று பந்து வீசும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருந்தார். அதற்கான பாராட்டுகளை நான் எப்போதும் எடுத்துக்கொள்ள போவதில்லை. ஆனால் அவர் கடினமான மறுபயிற்சியை மீண்டும் செய்தார்”

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: சோதிக்க விரும்பிய ரிஷப் பண்ட் பணத்துக்காக தான் இதை செஞ்சாரு.. ஹேமங் பதானி

“தற்போது அவர் க்ரீஸ்க்குள் நேராக செல்கிறார். பந்துக்கு பின்னே தன்னுடைய கையை வைத்து வீசுவதால் அவரின் பந்து ஸ்டம்புகளை நோக்கி செல்கிறது. அது கண்டிப்பாக அவருக்கு பெரிய உதவியாக இருக்கிறது” என்று கூறினார். மேலும் நல்ல கட்டுப்பாட்டுடன் பந்தை இருபுறமும் ஸ்விங் செய்து துல்லியமாக பந்து வீசும் பும்ரா முழுமையான பேக்கேஜ் போன்ற பவுலர் என்றும் மெக்ராத் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement