ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி பெர்த் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இளம் வீரர்களுக்கு பரிசளித்த கே.எல் ராகுல் :
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இரண்டு வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டனர். அந்த வகையில் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக அறிமுகமாகியிருந்தனர்.
அறிமுக போட்டியிலே இவர்கள் இருவரது செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்ததால் நிச்சயம் அடுத்த போட்டிக்கான இந்திய அணியிலும் அவர்கள் வாய்ப்பினை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் தோனியின் வழியை பின்பற்றி இளம் வீரர்களான அவர்கள் இருவருக்கும் ஒரு அன்பளிப்பு வழங்கியது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் தோனி கேப்டனாக இருந்த போது இளம்வீரர்கள் டெஸ்டில் அறிமுகமானால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்கு ஞாபகார்த்தமாக அந்தப் போட்டியின் ஸ்டம்பை பரிசாக வழங்குவார். அந்த வகையில் பெர்த் டெஸ்ட் போட்டியின் வெற்றிக்கு பிறகு ஸ்டம்புகளை கைப்பற்றிய கே.எல் ராகுல் ஹர்ஷித் ராணாவிற்கும், நித்திஷ் ரெட்டிக்கும் அதனை பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க : ஒரே நாள் மாலையில் அவர் ஆஸியை முடிச்சுட்டாரு.. 150க்கு அவுட்டான பின்பும் வென்ற இந்தியாவுக்கு.. டிராவிட் பாராட்டு
ஏனெனில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி பெறுவது என்பது அரிதான நிகழ்வு. அந்த வகையில் மிகச் சிறப்பான வெற்றியை அவர்கள் இருவருமே முதல் போட்டியில் சந்தித்ததால் அதனை மறக்கக்கூடாது என்பதற்காகவே அந்த ஸ்டம்புகளை ராகுல் அவர்கள் இருவருக்கும் வழங்கியுள்ளார். இப்படி தோனியின் வழியை பின்பற்றி இளம் வீரர்களுக்கு கே.எல் ராகுல் அன்புப்பரிசை வழங்கியது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



