நாட்டுக்காக அதை ஏத்துக்கோங்கன்னு கம்பீர் சொன்னது.. நிறைய ஹெல்ப் பண்ணுச்சு.. நிதிஷ் பேட்டி

Nitish reddy 2
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிதிஷ் ரெட்டி 41, ரிஷப் பண்ட் 37 ரன்கள் எடுத்த உதவியுடன் 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடும் ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 67-7 என தடுமாற்றத் துவக்கத்தை பெற்றது. கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், லபுஸ்ஷேன், ட்ராவிஸ் ஹெட் ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினார்கள். களத்தில் அலெக்ஸ் கேரி, மிட்சேல் ஸ்டார்க் போராடும் நிலையில் இந்தியாவுக்கு கேப்டன் பும்ரா 4* விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார்.

- Advertisement -

கம்பீர் ஆலோசனை:

முன்னதாக இந்தப் போட்டியில் இந்திய அணிக்காக ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி ஆகியோர் அறிமுகமாக களமிறங்கினார்கள். அதில் நிதிஷ் ரெட்டி மற்ற பேட்ஸ்மேன்கள் தடுமாறிய போது 41 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு கை கொடுத்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் எதிரணி பவுலர்கள் கடுமையான பவுன்சர் பந்துகளை வீசி தாக்குவார்கள் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்ததாக நித்திஷ் ரெட்டி கூறியுள்ளார்.

அது போன்ற பந்துகளை நாட்டுக்காக நெஞ்சில் தோட்டாவை ஏந்துவது போல தாங்கிக் கொள்ளுமாறு கம்பீர் தமக்கு ஆலோசனை தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “பெர்த் மைதானத்தை பற்றி நானும் நிறைய கேள்வி பட்டுள்ளேன். இங்கே பயிற்சி எடுத்த போது கௌதம் கம்பீருடன் நாங்கள் பேசினோம்”

- Advertisement -

தோட்டா போல:

“அப்போது நீங்கள் கடுமையான பவுன்சர்கள் அல்லது கூர்மையான பந்துகளை எதிர்கொள்ளும் போது அதை தோளில் வாங்கிக் கொள்ளுங்கள் என்று அவர் சொன்னார். அதை உங்களுடைய நாட்டுக்காக தோட்டாவை ஏற்றுக்கொள்வது போல் உணருங்கள் என்று கம்பீர் சொன்னார். அது எனக்கு நிறைய உதவி செய்தது. நிறைய உத்வேகத்தை கொடுத்தது”

இதையும் படிங்க: இந்த 2 விஷயத்தால் தான் பும்ரா மிரட்டுறாரு.. அதை நான் ஃபாலோ பண்ணா உடைஞ்சுருவேன்.. ஸ்டார்க் பாராட்டு

“பெர்த் மைதானத்தில் அதிகப்படியான வேகம் இருக்கும் என்று அனைவரும் பேசினார்கள். அதைக் கேட்ட போது நாட்டுக்காக நாம் தோட்டாக்களை ஏந்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பது போல் உணர்ந்தேன். அது தான் கம்பீர் சாரிடம் இருந்து நான் கேட்ட சிறந்த ஆலோசனை” என்று கூறினார். அந்த வகையில் இப்போட்டியில் இளம் வீரர்களுடன் இந்தியா வெற்றிக்காக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement