அதெல்லாம் தேவையில்ல.. தவற விட்டாலும் பரவால்ல.. ஷமியை உடனே ஆஸிக்கு அனுப்புங்க.. கங்குலி அட்வைஸ்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடரில் முகமது ஷமி விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றிய அவர் பின்னர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.

அதிலிருந்து குணமடைந்து கடந்த நியூஸிலாந்து தொடரிலேயே விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் புதிதாக காயத்தை சந்தித்தார். அதனால் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் தற்போது காயத்திலிருந்து குணமடைந்த அவர் ரஞ்சிக் கோப்பையில் விளையாடியுள்ளார்.

- Advertisement -

ஷமி கம்பேக்:

குறிப்பாக மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் மொத்தமாக 7 விக்கெட்டுகள் எடுத்த ஷமி பேட்டிங்கில் அதிரடியாக 37 (36) ரன்கள் குவித்தார். அந்த வகையில் 360 நாட்கள் கழித்து அபாரமான கம்பேக் கொடுத்த அவர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவாரா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் ஷமியை உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஞ்சிக் கோப்பை போட்டியில் அசத்திய அவர் சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் விளையாட தேவையில்லை என்று கங்குலி தெரிவித்துள்ளார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் தவற விட்டாலும் பரவாயில்லை இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்காக ஷமியை இப்போதே அனுப்புங்கள் என்று கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் ஷமி:

“ஆம் நானாக இருந்தால் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவேன். அவர் சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் விளையாட வேண்டிய அவசியமில்லை. பெர்த் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும் நான் அவரை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவேன். அவர் தொடர்ந்து பந்து வீச வேண்டும். இன்றும் சிறப்பாக பந்து வீசிய அவர் ஆஸ்திரேலியாவிற்கான விமானத்தில் இருக்க வேண்டும்”

இதையும் படிங்க: 4 சதங்கள்.. 210 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. சாம்சன் – திலக் வர்மாவும் இந்தியாவும் படைத்த 2 உலக சாதனை விவரம்

“அவர் ஆஸ்திரேலியா செல்லும் அடுத்த விமானத்தில் இருக்க வேண்டும். போட்டியை அவர் தவற விடலாம். ஆனால் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளை கொண்ட பெர்த் மைதானத்தில் ஆகாஷ் தீப்புக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா விளையாடுவார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அந்த சூழ்நிலைக்கு அவரின் உயரம் சரியாக இருக்கும். அதற்கடுத்த போட்டியில் விளையாடுவதற்கு ஷமி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement