4 சதங்கள்.. 210 ரன்ஸ் பார்ட்னர்ஷிப்.. சாம்சன் – திலக் வர்மாவும் இந்தியாவும் படைத்த 2 உலக சாதனை விவரம்

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 3 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. குறிப்பாக நவம்பர் 15ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற கடைசி போட்டியில் தென் ஆப்பிரிக்காவில் 135 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் திலக் வர்மா – சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள்.

குறிப்பாக ஒவ்வொரு ஓவரும் சுமாராக பந்து வீசிய தென்னாப்பிரிக்கா பவுலர்களை அந்த ஜோடி கருணை காட்டாமல் அடித்து நொறுக்கியது. அதே வேகத்தில் பட்டாசாக விளையாடி அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் ஓயாமல் அதிரடி காட்டியது. இறுதியில் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 210* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

திலக் – சாம்சன் ஜோடி:

அதன் மூலம் ஒரு சர்வதேச டி20 போட்டியில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஓப்பனிங் அல்லாத ஜோடி என்ற உலக சாதனையை சஞ்சு சாம்சன் – திலக் வர்மா படைத்தார்கள். அவர்களை தவிர்த்து உலகில் வேறு எந்த ஓப்பனிங் அல்லாத ஜோடியும் ஒரு போட்டியில் 200 ரன்கள் குவித்ததில்லை. அந்த பட்டியல்:
1. சஞ்சு சாம்சன் – திலக் வர்மா: 210*
2. கவுசல் – பவுடேல் (நேபாள்): 193, மங்கோலியாவுக்கு எதிராக, 2023
3. எங்கள்பேர்ச்ட் – லேவிட் (நெதர்லாந்து): 193, நமீபியாவுக்கு எதிராக, 2024

அவர்களுடைய அதிரடியால் இந்தியா 283-1 ரன்கள் குவித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த சாதனை படைத்தது. பின்னர் தென்னாபிரிக்காவை 148 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா அபார வெற்றி பெற்றது. அதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாகவும் இந்தியா சாதனை படைத்தது.

- Advertisement -

இந்தியாவின் சாதனை:

இது போக அந்த தொடரில் சஞ்சு சாம்சன் 2 சதங்களை அடித்தார். மேலும் திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு அடுத்தடுத்த போட்டிகளில் 2 சதங்களை பதிவு செய்தார். மொத்தத்தில் அந்த 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மொத்தம் 4 சதங்களை பதிவு செய்து அசத்தியது. அதன் மூலம் ஒரு சர்வதேச இருதரப்பு தொடரில் 4 சதங்கள் பதிவு செய்த முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.

இதையும் படிங்க: கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட இருக்கும் இந்திய வீரர் – யார் தெரியுமா?

இந்தியாவை தவிர்த்து உலகின் வேறு எந்த அணியும் ஒரு இருதரப்பு தொடரில் 2 சதங்களுக்கு மேல் அடித்ததில்லை. அந்த வகையில் இந்த தொடர் முழுவதும் தங்களை டி20 சாம்பியன் என்பதை நிரூபக்கும் வகையில் இந்தியா விளையாடியது. அந்த வெற்றி சமீபத்தில் நியூசிலாந்திடம் சந்தித்த தோல்வியால் துவண்டு கிடந்த இந்திய ரசிகர்களுக்கு ஆறுதலையும் கொடுத்தது.

Advertisement