கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட இருக்கும் இந்திய வீரர் – யார் தெரியுமா?

IND
- Advertisement -

அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரின் மூன்று அல்லது நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதால் இந்த தொடர் இந்திய அணிக்கு மிக முக்கியமான தொடராக மாறியுள்ளது.

பயிற்சியில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட காயம் :

இதன் காரணமாக ரோகித் சர்மா தவிர்த்து மற்ற இந்திய வீரர்கள் அனைவரும் இரண்டு குழுக்களாக ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றடைந்து பயிற்சி போட்டியில் கலந்து கொண்டு வரும் வேளையில் தொடர்ச்சியாக இந்திய அணியின் வீரர்கள் அடுத்தடுத்து காயம் அடைந்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே கே.எல் ராகுல், சர்பராஸ் கான் ஆகியோர் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். அதேபோன்று அண்மையில் வெளியான தகவலில் விராட் கோலிக்கும் காயம் ஏற்பட்டு அவரும் ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றுள்ளார் என்று கூறப்பட்டிருந்த வேளையில் விராட் கோலிக்கு பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்பதால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்திய அணியின் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான சுப்மன் கில் பயிற்சியின் போது கேட்ச் பிடிக்கையில் கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு உள்ளார் என்றும் இதன் காரணமாக அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

மேலும் சுப்மன் கில்லின் இந்த காயத்தை தீவிரமாக பரிசோதித்து வரும் மருத்துவக்குழுவானது முதல் போட்டியில் இருந்து அவர் விலக்குவது குறித்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் அவர் காயம் அதிகரித்தால் அது பெரிய பிரச்சனையை உண்டாக்கும் என்பதற்காகவே அவரை இந்த முதல் போட்டியில் இருந்து நீக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா, கோலி எல்லாம் பிரச்சனை கிடையாது.. இந்திய அணிக்கு இப்போ இவர்தான் பிரச்சனை – டிம் பெயின்

ஏற்கனவே ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு இல்லை என்று பேசப்பட்டு வரும் வேளையில் சுப்மன் கில்லும் விலகினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement