இந்திய கிரிக்கெட் அணி 2008க்குப்பின் எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. அதனால் 2023 ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடைபெற்றது. ஆனால் அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத இந்தியா தங்களுடைய போட்டிகளை இலங்கையில் விளையாடி வெற்றி கண்டது. அந்த வரிசையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது.
ஆனால் அந்த தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாத இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு ஐசிசிக்கு ஏற்கனவே கோரிக்கை வைத்ததாக செய்திகள் வெளிவந்தன. அந்த சூழ்நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட வேண்டாம் என்று பிசிசிஐயை இந்திய அரசும் அறிவுறுத்தியதாக சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால் பாகிஸ்தானுக்கு சென்று கண்டிப்பாக இந்தியா விளையாடாது என்று புதிய செய்திகள் காணப்படுகின்றன.
சொன்னதை செய்ங்க:
இந்நிலையில் சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்க இந்தியா வரவில்லை எனில் பாகிஸ்தானும் அதில் விளையாடாது என முன்னாள் கேப்டன் ரசித் லதீப் கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவதாக இந்தியா கையெழுத்திட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே கையெழுத்திட்டது போல் இந்தியா நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப் விமர்சித்துள்ளது பின்வருமாறு. “ஒருவேளை இது ஆசியக் கோப்பை அல்லது இருதரப்பு தொடர் என்றால் இந்தியா விளையாட விரும்புகிறார்கள் இல்லையா என்று கேட்கலாம். ஆனால் இது ஐசிசி தொடர். 2024 – 2031 ஐசிசி தொடர்கள் ஏற்கனவே கையெழுத்திடப்பட்டுள்ளன”
ரசித் லதீப் விமர்சனம்:
“ஸ்பான்சர்ஷிப் நிறுவனங்களும் ஒளிபரப்பாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளார்கள். அந்த சூழ்நிலையில் இந்தியா பாதுகாப்பு பிரச்சனை என்று சொல்வது திடமான காரணமாக இல்லை. இந்தியா – பாகிஸ்தான் அணிகளாலேயே ஐசிசி இருக்கிறது. ஒருவேளை இந்தியா போல பாகிஸ்தான் அரசும் நாங்கள் விளையாட முடியாது என்று சொன்னால் ஐசிசி நிறைய இழப்பை சந்திக்கும்”
இதையும் படிங்க: அய்யயோ என்னால இதை ஜீரணிக்க முடியலங்க.. தோத்துட்டோம்ன்னு ரொம்ப கஷ்டப்பட்டேன் – அஷ்வின் வருத்தம்
“ஏற்கனவே சாம்பியன்ஸ் ட்ராபியில் பங்கேற்பதாக இந்தியாவில் கையெழுத்து இட்டுள்ளது. எனவே அதை இந்தியா எளிதாக மறுக்க முடியாது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராது என்ற தேதிகள் காணப்படுகின்றன. ஒருவேளை அதை தெளிவான காரணங்களுடன் பிசிசிஐ கடினமாக எழுதிக் கொடுத்தால் மட்டுமே நாங்கள் ஏற்போம்” என்று கூறினார். அதனால் இந்த விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


