ஐ.பி.எல் தொடரிலிருந்து ஓய்வு எப்போது? சூசகமாக அறிவித்த ரன் மெஷின் விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2005 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது இம்மாத இறுதியில் சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த மெகா ஏலத்திற்கு முன்னதாக அக்டோபர் 31-ஆம் தேதி அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை அதிகாரபூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் வெளியான அந்த அறிவிப்பில் பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தன.

ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது? :

அந்த வகையில் இந்திய வீரர்களில் அதிகபட்ச தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக விராட் கோலி சாதனை நிகழ்த்தி இருந்தார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்காக பெங்களூரு அணியின் முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ள விராட் கோலி 21 கோடி ரூபாய்க்கு சம்பள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகள் அவர் பெங்களூரு அணிக்காக விளையாடுவது உறுதியாகியுள்ளது.

- Advertisement -

அதோடு கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஒரே அணியில் விளையாடும் வீரராகவும் அவர் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்நிலையில் தற்போது 35 வயதை எட்டியுள்ள விராட் கோலி டி20 உலக கோப்பை தொடருடன் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் விரைவில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஐபிஎல் தொடரில் அவர் எவ்வளவு தூரம் விளையாடுவார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் பெங்களூரு அணி சார்பாக வெளியிடப்பட்டுள்ள ஒரு வீடியோவில் தனது ஓய்வு குறித்த முடிவை அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : அடுத்த மெகா ஏலம் வருவதற்கு முன்னதாக நான் ஆர்.சி.பி அணியில் 20 ஆண்டுகளை நிறைவு செய்து விடுவேன்.

- Advertisement -

அதனை நினைக்கும் போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடுவேன் என்று ஐபிஎல் தொடர் துவங்கும் போது நினைக்கவில்லை. எனக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையிலான உறவு 17 ஆண்டுகளாக மிகவும் வலுவாக இருக்கிறது. எனக்கு ஆர்சிபி அணியை தவிர்த்து வேறு எந்த அணிக்கும் விளையாட விருப்பமில்லை. இதுவரை நான் ஆர்.சி.பி அணிக்காக விளையாடுவதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : கொல்கத்தா அணியிலிருந்து ஷ்ரேயாஸ் ஐயர் வெளியேற இதுதான் காரணம் – நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

அடுத்த மூன்று ஆண்டுகளில் நிச்சயம் ஒரு முறையாவது ஆர்.சி.பி அணிக்காக சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே தனது விருப்பம் என விராட் கோலி கூறியுள்ளார். இதன் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்பதை அவர் மறைமுகமாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement