இந்தியா – நியூஸிலாந்து 3வது டெஸ்ட் நடைபெறும் மும்பை மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Wankhede Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து வென்ற நியூஸிலாந்து 2 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று நியூசிலாந்து ஏற்கனவே சாதனையும் படைத்துள்ளது.

அதே வேகத்துடன் மூன்றாவது போட்டியிலும் வென்று ஒய்ட்வாஷ் செய்து இத்தொடரை வெல்ல நியூசிலாந்து தயாராகியுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணிலேயே முதலிரண்டு போட்டிகளில் மண்ணைக் கவ்விய இந்தியா 12 வருடங்கள் கழித்து ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் மிகப்பெரிய உலக சாதனையையும் கோட்டை விட்ட இந்தியா சொந்த மண்ணில் தலை குனிந்து விமர்சனங்களை சந்தித்துள்ளது.

- Advertisement -

மும்பை வான்கடே:

எனவே குறைந்தபட்சம் கடைசி போட்டியிலாவது வென்று ஒய்ட்வாஷ் தோல்வியைத் தவிர்த்து 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இந்தியா போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி காலை 9.30 மணிக்கு மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் துவங்க உள்ளது. இம்மைதானம் 1974ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

தற்போது 32000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 1975 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை நடைபெற்ற 26 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 12 வெற்றிகளையும் 7 தோல்விகளையும் பெற்றுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்தன.

- Advertisement -

குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிராக இங்கே விளையாடிய 3 போட்டிகளில் இந்தியா 2 தோல்வி 1 வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. கடைசியாக 2021ஆம் ஆண்டு இங்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தை 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவில் வீழ்த்தியது. இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி இந்தியா: 631, இங்கிலாந்துக்கு எதிராக, 2016

வெதர் ரிப்போர்ட்:

மும்பை நகரில் இப்போட்டி நடைபெறும் நவம்பர் 1 – 5 ஆகிய தேதிகளில் 10% மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக இந்திய மாநில மையம் தெரிவிக்கிறது. 60% ஈரப்பதத்துடன் கூடிய சூழ்நிலை நிலவும் என்று எதிர்பார்ப்படுவதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

வான்கடே பிட்ச் இந்தியாவில் உள்ள மற்ற மைதானங்களை போல இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே முதல் 2 நாட்கள் நங்கூரமாகவும் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம். அதே போல வேகபந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுத்து தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க: விராட் கோலியிடம் இதை கத்துக்கிட்டேன்.. 2014 பார்ட்னர்ஷிப் நின்னு பேசும்.. தனது கேப்டன்ஷிப் பற்றியும் ரஹானே

ஆனால் 2வது நாளிலிருந்தே இங்கே ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக கடைசியாக இங்கு நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து ஸ்பின்னர் அஜஸ் பட்டேல் 10 விக்கெட் எடுத்து உலக சாதனை படைத்தார். இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 334. இங்கு 11 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 8 முறை 2வதாக பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளது. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றியை கொடுக்கலாம்.

Advertisement