சொந்த மண்ணிலேயே மண்ணை கவ்விய இந்தியாவிடம் 2 பிரச்சனை இருக்கு.. ஆஸி தான் ஜெய்க்கும்.. டிம் பெய்ன்

Tim Paine 3
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளில் தோற்றுள்ளது. அதனால் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்தும் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாகவும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றுள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற நியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியிலும் ஆஸ்திரேலியாவில் 3 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியிடம் சொந்த மண்ணிலேயே இந்தியா நிறைய தவறுகளை செய்து மண்ணை கவ்வும் தோல்விகளை சந்தித்துள்ளதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.

- Advertisement -

மண்ணை கவ்விய இந்தியா:

மேலும் ஆஸ்திரேலிய தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் ஷமி காயத்தால் தேர்வு செய்யப்படாதது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவு என்றும் அவர் கூறியுள்ளார். அதே போல இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்தி இம்முறை கண்டிப்பாக ஆஸ்திரேலியா வெல்லும் என்று தெரிவிக்கும் டிம் பெய்ன் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“ஆஸ்திரேலியா வெல்லும் அணியாக தொடரை துவங்கும். இந்தியா நன்றாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். அவர்களின் பேட்டிங் கொஞ்சம் உடையக்கூடியதாக இருக்கிறது. அதே சமயம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வெளியீடுகள் அடிப்படையில் ஆச்சரியமாக தெரியவில்லை. ஆனால் அவர்கள் தரத்தை பெற்றுள்ளனர் என்பதை எங்களுக்குத் தெரியும்”

- Advertisement -

ஷமி இல்லாதது பின்னடைவு:

“அவர்களிடம் ஷமி இல்லாதது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதனால் பும்ரா தனது தோளில் அதிக பாரத்தை சுமக்க நேரிடும். அவர் காயத்தை சந்தித்தால் இன்னும் பின்னடைவு ஏற்படலாம். நியூசிலாந்து அணி அந்தளவுக்கு தரமாக செயல்படவில்லை. இருப்பினும் அவர்கள் நம்ப முடியாத செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமில்லை. அது இந்தியாவை கொஞ்சம் கவலையடைய வைத்திருக்கும் என்பதை உண்மையாகும்”

இதையும் படிங்க: அடி வாங்கியிருக்கும் இந்தியாவை சைலன்ட் பண்ணி.. கேரியரில் சாதிக்காத அதை சாதிப்பேன்.. பட் கமின்ஸ்

“அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஷமி இல்லாமல் அவர்கள் ஆத்திரேலியாவுக்கு வர உள்ளனர். அதே சமயம் இந்தியாவின் தவறுகளை பயன்படுத்தி தங்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொடரில் இந்தியா நிறைய தவறுகள் செய்தது என்று நினைக்கிறேன். மறுபுறம் நியூஸிலாந்து கேட்ச்களை அற்புதமாக பிடித்து வென்றது. அவர்களுக்கு தலை வணங்குகிறேன்” என்று கூறினார்.

Advertisement