இப்போ சொன்னா கூட இந்தியாவுக்கு எதிராக இதை செய்ய தயார்.. ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் மெசேஜ்

David Warner
- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது. அதே வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற இந்திய அணியினர் போராட உள்ளனர்.

2014 – 15க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகிறது. அந்த தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து இம்முறை இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியா தயாராகி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஓப்பனிங்கில் உஸ்மான் கவாஜாவுடன் யாரை களமிறக்கலாம் என்று ஆஸ்திரேலியா யோசித்து வருகிறது.

- Advertisement -

ரெடியா இருக்கேன்:

ஏனெனில் நீண்ட காலமாக விளையாடிய டேவிட் வார்னர் 2024 ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் ஓப்பனிங்கில் தடுமாற்றமாக விளையாடினார். அதனால் அவரை மீண்டும் நான்காவது இடத்தில் விளையாட வைக்க திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியா 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை நொறுக்கிய டிராவிஸ் ஹெட்டை துவக்க வீரராக களமிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தேவைப்பட்டால் ஓய்விலிருந்து மீண்டும் வந்து துவக்க வீரராக விளையாடி இந்தியாவை அடிக்க தயாராக இருப்பதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எப்போதும் தயாராக இருக்கிறேன். அழைத்தால் தொலைபேசியை எடுப்பது மட்டுமே மீதம். அதற்காக மிகவும் நான் தீவிரமாக இருக்கிறேன்”

- Advertisement -

வார்னர் அறிவிப்பு:

“கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற டெஸ்ட் தொடருக்குப்பின் ஆஸ்திரேலிய அணியினர் ஒரே ஒரு உள்ளூர் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளனர். நானும் அதே உள்ளூர் போட்டியில் விளையாடி அவர்களைப் போலவே தயாராகியுள்ளேன். எனவே இந்திய தொடருக்கு என்னை அவர்கள் விரும்பினால் அடுத்த ஷீல்டு (உள்ளூர்) போட்டியில் விளையாடுவேன்”

இதையும் படிங்க: இந்திய அணியில் அக்சர் படேல் இருந்தும் தமிழக வீரர் சுந்தர் சேர்க்கப்பட்டது ஏன்? கோச் ரியான் விளக்கம்

“சரியான காரணங்களுக்காகவே நான் ஓய்வு பெற்றேன். ஆனால் ஒருவேளை ஆஸ்திரேலிய அணியினர் என்னை போன்றவரை தீவிரமாக விரும்பினால் என்னுடைய கை அதற்கு உயர்ந்து இருக்கும். அதற்காக நான் கூச்சப்பட போவதில்லை” என்று கூறினார். வரலாற்றில் பல ஜாம்பவான் வீரர்கள் ஓய்விலிருந்து மீண்டும் வந்து நாட்டுக்காக விளையாடியுள்ளனர். அதே போல டேவிட் வார்னர் விளையாடுகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement