நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக 36 வருடங்கள் கழித்து தோல்வியை சந்தித்த இந்தியா இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
அந்த சூழ்நிலையில் தொடருக்கான கடைசி 2 போட்டிகளில் விளையாடும் இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்தனைக்கும் அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகிய 4 ஸ்பின்னர்கள் ஏற்கனவே அணியில் இருக்கின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐந்தாவது ஸ்பின்னராக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டது ஆச்சரியமாக அமைந்தது.
சுந்தருக்கு தீடீர் வாய்ப்பு:
மறுபுறம் 2024 ஜிம்பாப்வே மற்றும் இலங்கை டி20 தொடரில் வாஷிங்டன் சுந்தர் தொடர்நாயகன் விருதுகள் வென்று அசத்தினார். அத்துடன் ரஞ்சிக் கோப்பையில் டெல்லிக்கு எதிரான போட்டியில் 152 ரன்கள் குவித்த அவர் 6 விக்கெட்டுகளையும் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்தினார். அந்த வகையில் நல்ல ஃபார்மில் இருப்பதால் உடனடியாக அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியில் உள்ள இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சவாலை கொடுப்பதற்காக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வலுக்கட்டாயமாக தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அவரை கொண்டு வரவில்லை”
காரணம் என்ன:
“ஏனெனில் எங்களுடைய அணியில் ஏற்கனவே அக்சர் பட்டேல் இருக்கிறார். இருப்பினும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்தை வெளியே எடுக்கக்கூடிய ஒருவர் அணியில் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். அந்த ஆப்ஷன் இருப்பதை விரும்புகிறோம். அதனால் ரஞ்சிக் கோப்பையில் அசத்திய வீரர்களுக்கு பரிசாக இந்த வாய்ப்பு கிடைப்பதை பார்ப்பது நன்றாக இருக்கிறது”
இதையும் படிங்க: 6 இடத்துக்கு 7 பேர் போட்டி.. 2வது டெஸ்டில் சர்பராஸ் கானுக்காக கேஎல் ராகுல் நீக்கப்படுவாரா? கோச் ரியன் பதில்
“எங்கள் ஸ்பின்னர்கள் மீது நாங்கள் நிறைய நம்பிக்கையை வைத்துள்ளோம்” என்று கூறினார். இதையடுத்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனே நகரில் துவங்குகிறது. அப்போட்டியில் சில மாற்றங்களை செய்து நியூசிலாந்து அணிக்கு பதிலடி கொடுத்து வெற்றி பெறுவதற்காக இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள்.



