6 இடத்துக்கு 7 பேர் போட்டி.. 2வது டெஸ்டில் சர்பராஸ் கானுக்காக கேஎல் ராகுல் நீக்கப்படுவாரா? கோச் ரியன் பதில்

Ryan Doeschate 2
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதனால் 36 வருடங்கள் கழித்து தங்களுடைய சொந்த மண்ணில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா பரிதாபமாக தோற்றது. அதன் காரணமாக இத்தொடரை வெல்ல கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அதற்கு கேஎல் ராகுல் அணியிலிருந்து நீக்கப்படுவது அவசியமாகிறது.

ஏனெனில் சமீப வருடங்களாகவே சுமாராக செயல்பட்டு வரும் அவர் ஏற்கனவே இந்திய டி20 அணியில் இடத்தை இழந்துள்ளார். அதே போல ஒருநாள் அணிலும் நிலையான இடத்தை இழந்துள்ள அவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வாய்ப்பை இழக்க துவங்கியுள்ளார். குறிப்பாக கடந்த காலங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் கேஎல் ராகுல் அற்புதமான சதங்களை அடித்துள்ளார்.

- Advertisement -

தடுமாறும் ராகுல்:

அதன் காரணமாக அவருடைய அனுபவத்தை மதித்து வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேச தொடரில் ஜொலிக்காத ராகுல் இத்தொடரின் முதல் போட்டியிலும் 0, 12 ரன்கள் மட்டுமே அடித்து தோல்விக்கு முக்கிய காரணமானார். மறுபுறம் பெங்களூரு டெஸ்ட் போட்டியில் 150 ரன்கள் குவித்த சர்பராஸ் கான் குறைந்தபட்சம் இந்தியாவின் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க உதவினார்.

இந்த சூழ்நிலையில் சுப்மன் கில் காயத்திலிருந்து குணமடைந்து 2வது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சர்பராஸ் – ராகுல் ஆகியோரில் ஒருவர் பெஞ்சில் அமர வைக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது போன்ற சூழ்நிலையில் தேவைப்பட்டால் ராகுல் நீக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வாய்ப்பு யாருக்கு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கடந்த போட்டியில் அபாரமாக விளையாடினர். கேஎல் ராகுலிடம் சென்ற நான் நீங்கள் எத்தனை பந்துகளை அடித்தீர்கள் எத்தனை பந்துகளை விட்டீர்கள் என்று கேட்டேன். அவர் ஒரு பந்தை கூட அடிக்கவும் இல்லை விடவும் இல்லை. நீங்கள் ரன்கள் அடிக்காத போது இதுதான் நடக்கும். லெக் சைட் திசையில் அவர் கொஞ்சம் அடித்தது நல்லது”

இதையும் படிங்க: 2வது நியூஸிலாந்து டெஸ்ட் போட்டியில் கில், ரிஷப் பண்ட் குணமடைந்து விளையாடுவார்களா? கோச் ரியான் பதில்

“எனவே ராகுல் பற்றி எந்த கவலையும் இல்லை. ஆனால் நாங்கள் 6 இடத்தில் 7 பொருட்களை வைக்க வேண்டியுள்ளது. எனவே சூழ்நிலையை பார்த்து அதற்கு தகுந்தார் போல் நாங்கள் லெவனை தேர்ந்தெடுப்போம். 150 ரன்கள் குவித்த சர்பராஸ் இராணி கோப்பையில் இரட்டை சதத்தை அடித்தார். எனவே அவருடைய ஃபார்மை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அணியின் நலனுக்கு தேவையான முடிவை எடுப்போம். தொடர்ந்து அனைத்து வீரர்களுக்கும் ஆதரவும் கொடுப்போம்” என்று கூறினார்.

Advertisement