2வது நியூஸிலாந்து டெஸ்ட் போட்டியில் கில், ரிஷப் பண்ட் குணமடைந்து விளையாடுவார்களா? கோச் ரியான் பதில்

Ryan Doeschate
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. பெங்களூருகில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனால் சொந்த மண்ணில் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே இத்தொடரில் பின்தங்கியுள்ளது.

இதையடுத்து இத்தொடரை வெல்லவும் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறவும் கடைசி 2 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி காணப்படுகிறது. ஏனெனில் கடந்த போட்டியில் சிகிச்சை செய்து கொண்ட முழங்காலில் காயத்தை சந்தித்த அவர் அதையும் தாண்டி இந்தியாவுக்காக பேட்டிங் மட்டும் செய்தார்.

- Advertisement -

கில், ரிஷப் பண்ட் காயம்:

இருப்பினும் விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. அதே போல சுப்மன் கில் கழுத்துப்பகுதியில் காயத்தை சந்தித்ததால் முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் 3வது இடத்தில் விராட் கோலி விளையாடியதும் இந்தியாவின் தோல்விக்கு காரணமானது. இந்நிலையில் அந்த 2 வீரர்களும் தற்போது குணமடைந்து விளையாடுவதற்கு தயாராக உள்ளதாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டஸ்சேட் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அனைவரும் நன்றாக உள்ளனர். முதல் டெஸ்ட் போட்டியில் அதிக பவுலிங் இல்லை. அதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக உள்ளனர். ரிஷப் பண்ட் நல்லபடியாக இருக்கிறார். கடந்த போட்டியில் அவர் தன்னுடைய முழங்கால் அசைப்பதில் கொஞ்சம் அசவுகரியத்தை கொண்டிருந்தார். இருப்பினும் அவருக்காக காத்திருக்கிறோம்”

- Advertisement -

இந்தியா கம்பேக் கொடுக்குமா:

“2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு அவர் நன்றாக இருக்கிறார். சுப்மன் கில்லும் நன்றாக தெரிகிறார். அவர் பெங்களூருவில் சில பயிற்சிகளை எடுத்தார். அவரும் கழுத்துப் பகுதியில் கொஞ்சம் அசௌகரியத்தை கொண்டிருந்தார். தற்போது ஓரளவு நன்றாக இருக்கிறார்” என்று கூறினார். அதனால் அந்த இருவரும் இரண்டாவது போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஜெய் ஷா தலைவரானதும் கம்பீர் கோரிக்கைக்கு பச்சைக்கொடி.. ஐசிசி கமிட்டியின் 3 பரிந்துரைகள் இதோ

இதைத் தொடர்ந்து இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி துவங்குகிறது. அந்தப் போட்டி புனே நகரில் நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக முதல் போட்டியில் தோற்ற இந்தியா பின்னர் 4 போட்டிகளில் வென்று வென்று கோப்பையை முத்தமிட்டது. அதே போல இந்தத் தொடரிலும் இந்தியா கம்பேக் கொடுத்து வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement