ஐசிசி மகளிர் டி20 உ.கோ: 0 வெற்றி.. இலங்கையை வீட்டுக்கு அனுப்பி இந்தியாவுக்கு.. வில்லனாக மாறிய நியூஸிலாந்து

Womens Team
- Advertisement -

ஐசிசி மகளிர் 2024 டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 12ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு சார்ஜாவில் 15வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் நியூசிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் போராடி 115-5 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் சமாரி அட்டப்பட்டு 35 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக எமிலியா கெர் 2, லேக் காஸ்பேரேக் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 116 ரன்களை துரத்திய நியூசிலாந்து 17.3 ஓவரிலேயே 118-2 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு சுசி பேட்ஸ் 17, ஜார்ஜியா ஃபிலிம்மர் 53 (44), எமிலியா கெர் 34*, கேப்டன் சோபி டேவின் 13* ரன்கள் எடுத்து வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பாதகமான நியூஸிலாந்து:

அதனால் இலங்கையை ஒரு வெற்றி கூட பெற விடாமல் நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது. ஏனெனில் இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் இலங்கை 4 தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக கடந்த மாதம் நடைபெற்ற 2024 ஆசிய கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்த அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் மோசமாக விளையாடிய இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் பரிதாபமாக வெளியேறியது.

மறுபுறம் 3 போட்டிகளில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. தற்சமயத்தில் குரூப் ஏ பிரிவில் 3 போட்டிகளில் 3 வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா செமி ஃபைனல் செல்வது 99% உறுதியாகியுள்ளது. அதனால் 2வது அணியாக செமி ஃபைனல் செல்ல தலா 4 புள்ளிகளைக் கொண்டுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கிடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியா சாதிக்குமா:

அதில் நியூசிலாந்தை (+0.282) விட இந்தியாவின் (+0.576) ரன்ரேட் கூடுதலாக இருக்கிறது. எனவே இந்தியா தங்களது கடைசி போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தால் செமி ஃபைனலுக்கு செல்லலாம். ஆனால் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை தோற்கடிப்பது எளிதல்ல. மறுபுறம் நியூஸிலாந்து தங்களுடைய கடைசி போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: டீம் பஸ்ஸில் கூட ஏறாமல் ஹோட்டல் அறையிலேயே தங்கிய இந்திய வீரர் ஹர்ஷித் ராணா – என்ன நடந்தது?

அப்போட்டியில் நியூசிலாந்து வென்றால் இந்தியாவை நாக் அவுட் செய்து செமி ஃபைனல் செல்வதற்கு பிரகாச வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்தியா செமி ஃபைனல் செல்ல நியூசிலாந்து அதனுடைய கடைசி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்க வேண்டும். அல்லது நியூசிலாந்து பெரிய வெற்றியை பெறக்கூடாது. அதே சமயம் ஆஸ்திரேலிய அணியிடம் இந்தியா மோசமான தோல்வியை பெறவில்லையெனில் ரன்ரேட் அடிப்படையில் செமி ஃபைனல் செல்ல வாய்ப்புள்ளது.

Advertisement