இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியானது இன்று அக்டோபர் 12-ம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் விளையாடி வருகிறது.
மைதானத்திற்கே வராத ஹர்ஷித் ராணா :
இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை ஏற்கனவே இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி விட்டதால் மூன்றாவது போட்டியில் மாற்றம் ஏதும் இருக்குமா? அல்லது அணியில் அறிமுக வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா விளையாட வைக்கப்படுவாரா? என்ற பல்வேறு கேள்விகள் இருந்தன.
ஏனெனில் ஏற்கனவே கடந்த இரண்டு தொடர்களாக இந்திய அணியுடன் பயணித்து வரும் ஹர்ஷித் ராணாவிற்கு இதுவரை இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்கப்படவில்லை. முதல் இரண்டு போட்டியிலேயுமே அவர் விளையாடாத வேளையில் மூன்றாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்ற குரல்களும் வலுத்து வந்தன.
இந்நிலையில் இந்த வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் வீரர்கள் பேருந்தில் ஏறி மைதானத்திற்கு வரும் போது பேருந்தில் கூட ஏறாமல் ஹர்ஷித் ராணா ஹோட்டல் அறையிலேயே இருந்ததாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு பின்னால் உள்ள காரணம் யாதெனில் :
ஹர்ஷித் ராணாவிற்கு ஹைதராபாத் நகர் வந்தடைந்த பிறகு வைரல் காய்ச்சல் ஏற்பட்டதால் அதன் காரணமாகவே அவரால் மைதானத்திற்கு பயணிக்க முடியவில்லை என்றும் அதனால் அவர் இந்த கடைசி டி20 போட்டிக்கான அணியில் தேர்வு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார் என்றும் தெளிவான தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரோஹித்துக்கு அடுத்து டெஸ்ட் கேப்டனாக தகுதி பும்ராவிடம் தான் இருக்கு.. அதற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ
தற்போது அவர் வைரல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்து வரும் நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியுடன் டிராவல் ரிசர்வ் வீரராக பயணிப்பார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



