ரோஹித்துக்கு அடுத்து டெஸ்ட் கேப்டனாக தகுதி பும்ராவிடம் தான் இருக்கு.. அதற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விளையாட முடியாது என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. இதன் காரணமாக அந்த முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணியை கேப்டனாக வழிநடத்தப்போவது யார்? என்பது பலரது கேள்வியாகவும் இருந்தது.

ஜஸ்ப்ரீத் பும்ரா தான் அடுத்த கேப்டன் :

இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதன் காரணமாக நிச்சயம் ஜஸ்ப்ரீத் பும்ரா தான் ஆஸ்திரேலியா தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.

- Advertisement -

பொதுவாகவே இந்திய டெஸ்ட் அணியை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் மட்டுமே கேப்டனாக செயல்பட்ட வேலையில் பெரியதாக பந்து வீச்சாளர்களுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கிடைத்தது கிடையாது. ஆனால் கபில் தேவிற்கு பிறகு ஒரு வேகப்பந்து வீச்சாளராக இந்த கேப்டன்சி போட்டியில் பும்ரா முன்னிலையில் உள்ளார்.

ஏனெனில் தற்போதைய இந்திய அணியில் அனுபவ வீரர்களாக விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் இருந்தாலும் பந்துவீச்சு துறையில் இந்திய அணியை வழிநடத்திச் செல்வது பும்ரா தான். அதிலும் குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் தனது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

- Advertisement -

எந்த மைதானம் எப்படி இருந்தாலும் பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் அவர் பந்துவீச்சு திட்டத்தை தெளிவாக வைத்துள்ளதால் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் தனது திட்டத்தை தெளிவாக எடுத்துரைக்க முடியும். அதே போன்று பல்வேறு நாடுகளில் விளையாடிய அனுபவம் உள்ளதன் காரணமாகவும் ரோஹித்துக்கு அடுத்து கேப்டன்ஷிப் பொறுப்புக்கு அவர் தகுதியானவர் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரிலிருந்து ஓடுன ஆள் நான் கிடையாது.. இந்திய தொடரில் இதுக்கு பஞ்சமிருக்காது.. பட் கமின்ஸ் பேட்டி

ஏற்கனவே விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால் அவரைத் தாண்டி வேறு ஒரு பேட்ஸ்மேனை கேப்டனாக நியமிப்பதை விட பந்துவீச்சு துறையில் இந்திய அணியை தலைமை தாங்கும் ஜஸ்ப்ரீத் பும்ராவை நியமித்தால்தான் அது சரியாக இருக்கும் என்பதனால் பும்ரா அடுத்த டெஸ்ட் கேப்டனாவது உறுதி.

Advertisement