ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பட் கமின்ஸ் செயல்பட்டு வருகிறார். வேகப்பந்து வீச்சாளராக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தைப் பிடித்த அவர் 2023 ஆஷஸ் கோப்பையை இங்கிலாந்தில் தக்க வைத்தார். மேலும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் அவருடைய தலைமையிலான ஆஸ்திரேலியா ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
அதை விட 2023 உலகக் கோப்பையில் இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஃபைனலில் தோற்கடித்த ஆஸ்திரேலியா அவரது தலைமையில் 6வது கோப்பையை வென்றது. அந்த வகையில் ஒரே வருடத்தில் 2 ஐசிசி கோப்பைகளை வென்ற காரணத்தால் பட் கமின்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் 20.50 கோடிக்கு ஹைதராபாத் அணிக்காக வாங்கி கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பாதியில் ஓடியவன் அல்ல:
அந்த வாய்ப்பில் ஹைதராபாத் அணியை முதல் வருடத்திலேயே ஃபைனல் அழைத்துச் சென்ற பட் கமின்ஸ் வெற்றிகரமான கேப்டனாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று ஒரு அணியால் ஒப்பந்தம் செய்யப்படும் வீரர் கடைசி நேரத்தில் வெளியேறினால் 2 வருடங்கள் விளையாட தடை விதிக்கப்படும் என்ற புதிய விதிமுறையை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் ஏலத்தில் வாங்கப்பட்டப் பின் தாம் எப்போதும் பாதியிலேயே வெளியேறியதில்லை என்று கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாடுவதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவிக்கும் அவர் நாட்டுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதே முன்னுரிமை என்று கூறியுள்ளார். அத்துடன் நவம்பர் மாதம் நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் பற்றியும் அவர் பேசியது பின்வருமாறு. “வரும் ஐபிஎல் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க கொஞ்சம் நான் வேலை செய்ய உள்ளேன்”
சாவலான இந்தியா:
“அதில் விதிமுறைகளில் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது கடந்த காலங்களில் என்னை பாதித்திருக்குமா என்பது தெரியாது. ஆனால் ஏலத்திற்கு பின்னால் நான் எப்போதும் வெளியேறியதில்லை. டெஸ்ட் போட்டிகளுக்கே என்னுடைய முன்னுரிமை இருக்கும். அடுத்ததாக சில உலகக் கோப்பைகளும் நடைபெற உள்ளது. அதன் பின் ஐபிஎல் தொடரில் விளையாட முடியுமா என்பதுப் பற்றி பார்க்க வேண்டும்”
இதையும் படிங்க: ஹார்டிக் பாண்டியாவுடன் சேர்த்து அவரையும் விளையாட வச்சது இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் – ஆகாஷ் சோப்ரா
“எப்படியிருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது எனது நம்பர் ஒன் வேலை. கடைசியாக இந்தியாவுக்கு எதிராக எங்கள் ஊரில் நான் விளையாடிய 2 தொடர்களிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. கடந்த தொடர்
கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான கபாவில் கடைசி செஷன் வரை சென்றது. அதை மனதில் வைத்துக் கொள்வது நல்லது. இது ஒரு நீண்ட தொடராகும். அதில் கடைசி ஆட்டம் வரை இறுக்கமாக இருக்கலாம. எனவே உங்கள் திறமைகளை நீங்கள் முழுவதும் நிர்வகிக்க வேண்டும்” என்று கூறினார்.



