சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட்
அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் ஏற்கனவே இந்த தொடரினை கைப்பற்றி விட்டது.
இந்திய அணிக்கு இவர் மூலம் பலம் சேர்ந்துள்ளது :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 தொடரில் முதன்மை வீரர்கள் பலருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
அந்த வகையில் இந்த தொடரில் ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மாயங்க் யாதவ் ஆகியோர் அறிமுகமாகி தங்களது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதிலும் குறிப்பாக ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி தான் விளையாடிய இரண்டாவது போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்தது மட்டுமின்றி பந்து வீச்சிலும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இந்நிலையில் அவரது இந்த சிறப்பான செயல்பாடு குறித்து பாராட்டி பேசியிருந்த இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : ஹார்டிக் பாண்டியாவுடன் நிதீஷ் ரெட்டி ஒன்றாக களமிறங்கியது இந்திய அணியின் ஒரு சிறப்பான நகர்வு என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் நிதீஷ் ரெட்டி இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பேட்டிங்கில் நான்காவது இடத்தில் இறங்கும் அவர் நின்ற இடத்தில் இருந்து சிக்ஸரை விளாசும் வீரராக இருக்கிறார். அவர் மிகவும் பலம் வாய்ந்த வீரராக எனக்கு தெரிகிறார். பேட்டிங்கில் அவரது பவர் ஹிட்டிங்கை காண்பித்தாலும் பந்துவீச்சில் அவர் இன்னும் சில திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அது நிச்சயம் பாண்டியாவின் மூலம் நிறைவேறும் பாண்டியாவுடன் அவர் இன்னும் சில போட்டிகள் இணைந்து விளையாடும் பட்சத்தில் அவருக்கு அவருடைய அனுபவம் கிடைக்கும்.
இதையும் படிங்க : உலகமே பாகிஸ்தானை பாத்து சிரிக்குது.. இதுக்கு ரோஹித் ரூட்டை ஃபாலோ பண்ணாததே காரணம்.. கம்ரான் அக்மல்
நிதீஷ் ரெட்டி இந்திய டி20 அணியில் தொடர்ந்து இடம்பெற வேண்டிய வீரராகவே எனக்கு தெரிகிறார். அணியில் ஆல் ரவுண்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது பேட்டிங்கின் ஆழமும் அதிகரிக்கும், பந்துவீச்சிலும் அவர்களால் கை கொடுக்க முடியும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



