உலகமே பாகிஸ்தானை பாத்து சிரிக்குது.. இதுக்கு ரோஹித் ரூட்டை ஃபாலோ பண்ணாததே காரணம்.. கம்ரான் அக்மல்

Kamran Akmal
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. ஆனால் அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது. இத்தனைக்கும் முதல் போட்டியில் 556 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தார் ரோட் போல இருந்த பிட்ச்சில் பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 823-7 ரன்கள் குவித்தது. பின்னர் பாகிஸ்தானை 220 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்ஸில் 500+ ரன்கள் குவித்தும் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த முதல் அணியாக பாகிஸ்தான் மோசமான உலக சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

உலகமே சிரிக்குது:

இது போக வங்கதேசத்திடம் கடந்த மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. இத்துடன் சமீபத்திய ஐசிசி தொடர்களில் ஜிம்பாப்வே, அமெரிக்கா போன்ற கத்துக்குட்டிகளிடம் தோல்விகளைச் சந்தித்த பாகிஸ்தான் தற்சமயத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பின்பற்றும் சுயநலமின்றி எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை பின்பற்றாமல் சுயநலத்துடன் விளையாடுவதே பாகிஸ்தானின் இந்த சரிவுக்கு காரணம் என்று முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் வேதனை தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் தோல்வியை சந்தித்த விதத்தை பார்த்து உலகம் ஆச்சரியமடைந்திருக்கும். பாகிஸ்தான் இப்படி லோக்கல் அணியை போல் மாறியுள்ளதை யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு கிளப் அணி கூட இப்படி மோசமாக விளையாடாது. இதுவே நம்முடைய அணியின் தற்போதைய தரம்”

- Advertisement -

சுயநலமான அணுகுமுறை:

“சிறிய குட்டிகளுக்கு எதிராக வெல்லும் நம்மால் பெரிய அணிகளிடம் வெற்றியை நெருங்க கூட முடியவில்லை. அதனால் மொத்த உலகமும் பாகிஸ்தான் அணியை பார்த்து சிரிக்கிறது. பாகிஸ்தான் அணியில் சுயநலமான அணுகுமுறை இருக்கிறது. எங்களுடைய நாட்டில் உள்ள வீரர்கள் முதலில் தங்களுடைய சொந்த சாதனைகளுக்காக விளையாடுகிறார்கள். பின்பு தான் அணியைப் பற்றி சிந்திக்கின்றனர்”

இதையும் படிங்க: விராட் கோலி இல்ல.. பட் கமின்ஸ் போல 2 குறி.. ஜஸ்ப்ரித் பும்ரா வைத்து பிசிசிஐ போட்டுள்ள பெரிய பிளான்

“எந்த வீரர்கள் இந்த வேலையை செய்கிறார்கள் என்பதைப் பற்றி கேப்டனிடம் கேட்க வேண்டும். அதை செய்யும் வீரர்களிடம் விசாரணை நடத்தி நீக்க வேண்டும். அதை செய்யாத நீங்கள் சுமாராக செயல்படும் அவர்களுக்கு ஆதரவாக நடக்கிறீர்கள். உலகின் மொத்த அணிகளும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி சாதனைகள் படைக்கின்றன. இது ஒரு அவமானமான செயல்பாடு” என்று கூறினார்.

Advertisement