68 ரன்ஸ் 2 விக்கெட்ஸ்.. நியூஸிலாந்தின் சச்சினாக வில்லியம்சன் சாதனை.. இலங்கைக்கு தனியாளாக சவால் தரும் ரவீந்திரா

SL vs NZ
- Advertisement -

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் முதல் போட்டி கால்லே நகரில் செப்டம்பர் 18ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்ஸில் 305 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கமிண்டு மெண்டிஸ் சதமடித்து 114 ரன்களும் குசால் மெண்டிஸ் 50 ரன்களும் குவித்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓரோர்க்கே 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் பின் களமிறங்கிய நியூசிலாந்து நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 340 ரன்கள் குவித்து இலங்கையை விட முன்னிலை பெற்றது.

- Advertisement -

நியூஸிலாந்து நாயகன் வில்லியம்சன்:

அதிகபட்சமாக டாம் லாதம் 70, கேன் வில்லியம்சன் 54, டேரில் மிட்சேல் 57, கிளன் பிலிப்ஸ் அதிரடியாக 49* (48) ரன்கள் குவித்தனர். இலங்கைக்கு அதிகபட்சமாக பிரபத் ஜெயசூர்யா 4, ரமேஷ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 35 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 309 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கருணரத்னே 83, தினேஷ் சண்டிமல் 61, ஏஞ்சலோ மேத்யூஸ் 50, கேப்டன் டீ சில்வா 40 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 275 ரன்களை துரத்தும் நியூசிலாந்துக்கு டேவோன் கான்வே 4 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்ததாக வந்த நட்சத்திரம் கேன் வில்லியம்சன் 30 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

சமமான வெற்றி:

இதையும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்காக அவர் 18213 ரன்கள் குவித்துள்ளார். அதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் நியூசிலாந்துக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற ராஸ் டெய்லர் சாதனையை உடைத்துள்ள வில்லியம்சன் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் ராஸ் டெய்லர் 18199 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா நங்கூரமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் டாம் லாதம் 28, டேரில் மிட்சேல் 3, டாம் ப்ளாண்டல் 30, கிளன் பிலிப்ஸ் 4, சான்ட்னர் 2, கேப்டன் சௌதீ 2 ரன்களில் அவுட்டாகி கை கொடுத்த தவறினர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக விளையாடும் ரவீந்திர அரை சதமடித்து 91* (158) ரன்கள் குவித்துள்ளார்.

இதையும் படிங்க: 111 ரன்ஸ்.. ஃபைனலில் சறுக்கிய ருதுராஜ் அணி.. சுதர்சன் மாஸ்டர்க்ளாஸ்.. 2024 துலீப் கோப்பையை வென்ற ஏ அணி

அப்போது நிறைவுக்கு வந்த 4வது நாள் முடிவில் நியூஸிலாந்து 207-8 ரன்கள் குவித்துள்ளது. எனவே கடைசி நாளில் மேற்கொண்டு தேவைப்படும் 68 ரன்கள் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடும் ரச்சின் ரவீந்திரா அடித்து நியூசிலாந்தை வெற்றி பெற வைப்பாரா அல்லது 2 விக்கெட்டுகள் எடுத்து இலங்கை வெல்லுமா என்று ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

Advertisement