111 ரன்ஸ்.. ஃபைனலில் சறுக்கிய ருதுராஜ் அணி.. சுதர்சன் மாஸ்டர்க்ளாஸ்.. 2024 துலீப் கோப்பையை வென்ற ஏ அணி

Duleep Trophy 2024
- Advertisement -

இந்தியாவில் துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி துவங்கியது. அதில் செப்டம்பர் 19ஆம் தேதி துவங்கிய கடைசி ரவுண்டில் 6வது போட்டியில் மயங் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணிகள் மோதின. அனந்தபூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 297 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சஸ்வந்த் ராவத் சதமடித்து 124, சம்ஸ் முலானி 44, ஆவேஷ் கான் 51* ரன்கள் எடுத்தனர். இந்தியா சி அணிக்கு அதிகபட்சமாக விஜயகுமார் வைசைக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் களமிறங்கிய இந்தியாசி முடிந்தளவுக்கு போராடியும் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

சறுக்கிய ருதுராஜ் அணி:

ருதுராஜ் 17, சாய் சுதர்சன் 17, இஷான் கிசான் 5 ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக அபிஷேக் போரல் 82 ரன்கள் எடுத்தார். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஆவேஷ் கான், ஆகிப் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 63 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ஏ 2வது இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து 286 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக ரியான் பராக் 73, சஸ்வந்த் ராவத் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக கௌரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியில் 350 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியா சி அணிக்கு விஜய்குமார் 17 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் நிதானமாக விளையாடினார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ருதுராஜ் 44 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

இந்தியா ஏ சாம்பியன்:

ஆனால் அடுத்ததாக வந்த ரஜத் படிடார் 7, இஷான் கிசான் 17, அபிஷேக் போரேல் 0, பாபா இந்திரஜித் 0 என அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் எதிர்ப்புறம் 206 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரியுடன் மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ் விளையாடிய சாய் சுதர்சன் சதமடித்து 111 ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார்.

இறுதியில் 217 ரன்களுக்கு இந்தியா சி அணியை சுருட்டிய இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக தானுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அந்த வகையில் மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

இதையும் படிங்க: ரிஷப் பண்ட் சிறந்த கீப்பரா வருவாரு.. ஆனா தோனி இந்தியாவுக்காக இதை செஞ்சதை மறக்காதீங்க.. டிகே கருத்து

மறுபுறம் கடைசிப் போட்டியில் சொதப்பிய இந்தியா சி அணி 2வது இடத்தை மட்டுமே பிடித்தது. அதே போல தனது கடைசிப் போட்டியில் இந்தியா பி அணியை 258 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி தோற்கடித்தது. ஆனால் முதலிரண்டு போட்டிகளில் தோற்றதால் அந்த அணி கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. இந்தியா பி அணி 3வது இடத்தை பிடித்து இத்தொடர் நிறைவு பெற்றது.

Advertisement