ரிஷப் பண்ட் சிறந்த கீப்பரா வருவாரு.. ஆனா தோனி இந்தியாவுக்காக இதை செஞ்சதை மறக்காதீங்க.. டிகே கருத்து

Dinesh Karthik
- Advertisement -

சென்னையில் வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விட்ட வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 634 நாட்கள் கழித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கினார்.

அந்த வாய்ப்பில் 2வது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய அவர் தனது 6வது சதத்தை அடித்து 109 ரன்கள் குவித்தார். அதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற ஜாம்பவான் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் சமன் செய்தார். சொல்லப்போனால் 90 டெஸ்ட் போட்டிகளில் தோனி அடித்த 6 சதங்களை ரிஷப் பண்ட் வெறும் 34 போட்டிகளிலேயே சமன் செய்துள்ளார்.

- Advertisement -

எம்எஸ் தோனி – ரிஷப் பண்ட்:

அது போக ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் முடியாத சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை விட ரிஷப் பண்ட் தான் சிறந்தவர் என்று பலரும் பாராட்டத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் இப்போதே தோனியுடன் ஒப்பிடுவது ரிஷப் பண்ட்க்கு அழுத்தத்தை உண்டாக்கும் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

மேலும் விக்கெட் கீப்பராக மட்டுமின்றி 2010ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவை நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேற்றிய பெருமை தோனிக்கு உள்ளது என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றியமைத்தது உட்பட தோனி பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

தினேஷ் கார்த்திக் கருத்து:

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் கார்த்திக் பேசியது பின்வருமாறு. “34 போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட்டை அதற்குள் இந்தியாவின் மகத்தான விக்கெட் கீப்பர் என்று சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அவருக்கு நேரத்தை கொடுங்கள். அதற்குள் முடிவுக்கு வராதீர்கள். ஆனால் கண்டிப்பாக இந்திய கிரிக்கெட்டின் மகத்தான விக்கெட் கீப்பராக கேரியரை முடிக்கும் வழியில் ரிஷப் பண்ட் உள்ளார்”

இதையும் படிங்க: ஸ்பெஷலான ரிஷப் பண்ட் தோனியை விட சிறந்தவர் சொல்லாதீங்க.. காரணம் இது தான்.. அஜய் ஜடேஜா பேட்டி

“அதே சமயம் விக்கெட் கீப்பராக தோனியின் திறமையையும் தள்ளுபடி செய்து விடாதீர்கள். அவர் நன்றாக கீப்பிங் செய்தது மட்டுமின்றி இந்தியாவுக்காக தேவைப்படும் நேரங்களில் ரன்கள் அடித்துள்ளார். அவர் இந்திய அணியை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று நம்பர் ஒன் இடத்தை பிடிக்க தலைமை தாங்கினார். எனவே ஒரு வீரரை பற்றி நீங்கள் பேசும் போது இது போன்ற மற்ற எடைகளையும் ஒப்பிட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement