இன்னும் 14 விக்கெட் தான் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் தமிழக வீரர் அஷ்வின்

Ashwin-and-Lyon
- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணியானது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த போட்டியில் தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினும் விளையாட இருக்கிறார். இதன் காரணமாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் அனைவரும் ஏற்கனவே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஷ்வின் நிகழ்த்த இருக்கும் சாதனை :

இந்த டெஸ்ட் தொடரில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான விடயங்கள் நடைபெற காத்திருக்கின்றன. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும் ஒரு சாதனை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கான வாய்ப்பை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்து நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மட்டும் இதுவரை 43 போட்டியில் விளையாடியுள்ள அவர் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து ஆஸ்திரேலியாவின் கேப்டன் பேட் கம்மின்ஸ் 175 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் தற்போது 174 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்தில் இருக்கும் அஸ்வின் நிச்சயம் கம்மின்ஸ்ஸை தாண்டி விடுவார்.

இதையும் படிங்க : இந்தியா எனக்கு பிடிச்ச டீம் கிடையாது.. ஆனா சம்மரில் வெற்றிகரமாக இதை செய்வேன்.. டிராவிஸ் ஹெட் பேட்டி

அதன் பின்னர் மேலும் 14 விக்கெட்டுகளை எடுக்கும் பட்சத்தில் நாதன் லயனை பின்னுக்கு தள்ளி அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பார். அதோடு மட்டுமின்றி அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் அவர் 26 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement