இந்தியா எனக்கு பிடிச்ச டீம் கிடையாது.. ஆனா சம்மரில் வெற்றிகரமாக இதை செய்வேன்.. டிராவிஸ் ஹெட் பேட்டி

Travis Head
- Advertisement -

கிரிக்கெட்டில் எப்போதுமே சில வீரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அணியைப் பிடிக்கும் என்று சொல்லலாம். ஏனெனில் மற்ற அணிகளுக்கு எதிராக தடுமாறினால் கூட அந்த குறிப்பிட்ட அணிக்கு எதிராக அவர்கள் சிறப்பாக விளையாடுவது வழக்கமாகும். அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான கிரிக்கெட் அணி என்று சொன்னால் மிகையாகாது.

ஏனெனில் லண்டனில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவை அட்டகாசமாக எதிர்கொண்ட அவர் 163 (174) ரன்கள் குவித்தார். அதனால் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போல 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா தொடர்ந்து 10 வெற்றிகளுடன் எதிரணிகளை தெறிக்க விட்டது.

- Advertisement -

பிடிக்காத இந்தியா:

ஆனால் அத்தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை அடித்து நொறுக்கிய டிராவிஸ் ஹெட் 137 (120) ரன்கள் குவித்தார். அதனால் இந்தியாவை மீண்டும் ஃபைனலில் தோற்கடித்த அவர் ஆஸ்திரேலியா 6வது முறையாக உலகக் கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் வென்றார். இந்நிலையில் இந்தியா தமக்கு மிகவும் பிடித்த எதிரணி கிடையாது என்று ஹெட் கூறியுள்ளார்.

இருப்பினும் இந்தியா மிகவும் சவாலை கொடுக்கக்கூடிய அணி என்று அவர் பாராட்டியுள்ளார். எனவே சவாலான இந்தியாவை தங்களது கோடைகாலத்தில் நடைபெறும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சிறப்பாக எதிர்கொண்டு ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைப்பேன் என்றும் டிராவிஸ் ஹெட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

இந்தியாவின் சவால் ஹெட்:

“இந்தியா மிகவும் பிடித்தவர்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களுக்கு எதிராக நாங்கள் அதிகமாக விளையாடுகிறோம் என்று நினைக்கிறேன். கடந்த 2 வருடங்களாக நான் நல்ல ஃபார்மில் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனவே சிறப்பாக விளையாட முடிந்தால் அது நன்றாக இருக்கும். அவர்களுடனான போட்டிக்கு எழுவது கடினமல்ல என்று நினைக்கிறேன். அது மிகவும் போட்டி தன்மை வாய்ந்தது”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவுக்கு அந்த கவலை இருக்கும்.. 100% ரெடியாகாம கம்பேக் கொடுக்க மாட்டேன்.. ஷமி ஓப்பன்டாக்

“இருப்பினும் அவர்களை எனக்குப் பிடித்த எதிரணி என்று சொல்ல மாட்டேன். அவர்களுக்கு எதிராக மீண்டும் விளையாட தயாராக இருக்கிறோம். எனவே கோடைகாலத்தில் அவர்களுக்கு எதிராக எங்களுடைய அணிக்கு என்னால் வெற்றியில் பங்காற்ற முடியும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். மொத்தத்தில் 2018-19, 2020 – 21 ஆகிய தொடர்களில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடாத ஹெட் இம்முறை துவக்க வீரராக விளையாட உள்ளது இந்தியாவுக்கு பெரிய சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement