டேவான் கான்வேவிற்கு 33 வயதாகிவிட்டது.. அதனால் ரச்சின் ரவீந்திரா தான் – சி.எஸ்.கே அணி எடுத்துள்ள முடிவு

Rachin-Ravindra
- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை கொண்ட அணியாக இன்றளவும் திகழ்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் சென்னை அணி பெரும்பாலும் தீவிரமான ரசிகர்களைக் கொண்ட அணியாக இருப்பதோடு ஒவ்வொரு ஆண்டும் சென்னை அணியில் இடம் பெறும் வீரர்கள் அளிக்கும் செயல்பாடு மிகப்பிரமாதமாக இருந்து வருவதாலேயே இன்றளவும் சென்னை அணி மிகப் பெரிய அணியாக இருந்து வருகிறது.

ரச்சின் ரவீந்திராவை மிகப்பெரிய வீரராக மாற்ற திட்டம் :

கடந்த காலகட்டங்களில் அனுபவ வீரர்களை கொண்ட சென்னை அணியானது “டேடிஸ் ஆர்மி” என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் பல்வேறு இளம் வீரர்களுக்கு சென்னை அணியில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நியூசிலாந்து அணி சேர்ந்த 24 வயதான ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திராவை கடந்த ஆண்டு சென்னை அணி தேர்வு செய்து 10 போட்டிகளில் விளையாட வைத்தது.

- Advertisement -

அதன்படி அவர் விளையாடிய 10 போட்டிகளில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் 222 ரன்களை மட்டுமே குவித்து இருந்தாலும் சென்னை அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக உருவாகி இருக்கிறார். டேவான் கான்வே தொடர்ந்து துவக்க வீராராக களமிறங்கி வந்த வேளையில் கடந்த சீசனில் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணமாக ரச்சின் ரவீந்திரா துவக்க வீரராக களம் இறங்கினார்.

கடந்த தொடரில் அவர் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அவரை சென்னை அணி ரீடெயின் செய்ய இருக்கிறது. ஏனெனில் தற்போது 33 வயதாகும் கான்வே இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? என்பது உறுதியாக தெரியவில்லை.

- Advertisement -

ஆனால் ரச்சின் ரவீந்திராவை பொருத்தவரை இன்னும் 10 ஆண்டுகள் அவருக்கு கரியர் மீதம் இருப்பதால் அவரை சென்னை அணி தக்க வைத்து மிகப்பெரிய வீரராக மாற்றும் முயற்சியில் இருக்கிறது. அதன் முதல் கட்டமாக தான் தற்போது சென்னை அணி நிர்வாகம் அவரை சிஎஸ்கே அகாடமியில் பயிற்சி செய்ய அனுமதித்துள்ளது. நியூசிலாந்து அணி எதிர்வரும் சில மாதங்களில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் என அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ள வேளையில் நியூஸிலாந்தில் பயிற்சி எடுப்பதை விட இந்திய ஆடுகளங்களை பயிற்சி எடுத்தால் நல்லது என்று கேட்டுக் கொண்ட ரவீந்திரவிற்கு சென்னை அணி நிர்வாகம் அனுமதியும் வழங்கியது.

இதையும் படிங்க : சூரியகுமார் எங்கும் போகமாட்டார்.. இப்படி பேசாதீங்க.. வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த – மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்

இவ்வேளையில் இப்படி ரச்சின் ரவீந்திராவிற்கு சென்னை அணியின் நிர்வாகம் சலுகைகளை வழங்க காரணமே அவரை தக்க வைக்கத்தான் என்றும் அவர் நீண்ட கால பிளேயர் என்பதனால் அவரை பெரிய நட்சத்திரமாக மாற்றும் முயற்சியில் தற்போது சென்னை அணி நிர்வாகம் சில நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement