தொடர்ந்து அசத்தும் சாய் சுதர்ஷன்.. கம்பீர் மற்றும் அகார்கர் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள புதிய தலைவலி – விவரம் இதோ

Sai
- Advertisement -

தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அறிமுகமாக இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 1034 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அவரது அட்டகாசமான ஆட்டம் காரணமாக 2023-ஆம் ஆண்டு அவருக்கு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவர் 2 அரை சதங்களுடன் 127 ரன்கள் குவித்துள்ளார்.

தொடர்ந்து அசத்தும் சாய் சுதர்சன் :

மேலும் ஒரு டி20 போட்டியிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேன்கள் பற்றாக்குறை எப்பொழுதுமே இருந்து வரும் வேளையில் இவரது சிறப்பான ஆட்டம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

- Advertisement -

ஆனாலும் காயம் காரணமாக கடந்தாண்டு இறுதியில் அவரால் இந்திய அணி இடம் பெற முடியாமல் போனது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இடம் பிடித்து விளையாடி வரும் அவர் விரைவில் டெஸ்ட் போட்டிகளிலும் அறிமுகமாக பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அனைவரும் அவரது ஆட்டத்தை பாராட்டி வருகின்றனர்.

ஏனெனில் தற்போது இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் துலீப் டிராபி தொடரில் விளையாட இருக்கும் வேளையில் அவரும் அந்த தொடருக்கான இந்திய சி அணியில் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் அதற்கு முன்னதாக தற்போது இங்கிலாந்து சென்றுள்ள அவர் நாட்டிங்ஹாம் அணிக்கெதிராக நடைபெற்ற போட்டியில் 178 பந்துகளை சந்தித்து 105 ரன்கள் அடித்து அசத்தினார்.

- Advertisement -

இதில் 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இங்கிலாந்து போன்ற சவாலான மைதானத்தில் அவரது இந்த மிகச் சிறப்பான ஆட்டம் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் அகார்கர் ஆகியோருக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

இதையும் படிங்க : பொதுவான இடத்திலேயே அப்படின்னா.. சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தாம விடுவோமா.. பட் கமின்ஸ் சவால்

ஏனெனில் வெளிநாடுகளிலேயே மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவருக்கு உள்நாட்டில் வாய்ப்பு அளித்து நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க வேண்டும் என்ற குரல்கள் இனி எழ ஆரம்பிக்கும். அதேபோன்று தற்போது 22 வயதாகும் அவரை இந்திய அணியில் இணைத்து அவரை தயார் படுத்தினால் நிச்சயம் அவர் நீண்ட காலத்திற்கான வீரராக வருவார் என்று பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement