பொதுவான இடத்திலேயே அப்படின்னா.. சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தாம விடுவோமா.. பட் கமின்ஸ் சவால்

Pat Cummins
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் வரும் நவம்பர் மாதம் துவங்க உள்ளது. பொதுவாகவே ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினமாகும். அப்படிப்பட்ட வலுவான ஆஸ்திரேலியாவை 2018 – 19 டெஸ்ட் தொடரில் முதல் முறையாக விராட் கோலி தலைமையில் இந்தியா தோற்கடித்து வரலாறு படைத்தது.

அதற்கு பதிலடியாக 2020 – 21 தொடரின் முதல் போட்டியிலேயே 36 ரன்களுக்கு இந்தியாவை ஆல் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா வரலாறு காணாத தோல்வியை பரிசளித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே தலைமையில் கொதித்தெழுந்த இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் மீண்டும் கோப்பையை வென்றது. குறிப்பாக காபா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை 32 வருடங்கள் கழித்து தோற்கடித்து இந்தியா வரலாற்று வெற்றியை பெற்றது.

- Advertisement -

பொதுவான இடத்தில் வெற்றி:

அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் கடைசியாக இந்தியாவுக்கு எதிராக பொதுவான இடமான இங்கிலாந்தில் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடி கோப்பையை வென்றதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறியுள்ளார்.

எனவே இம்முறை தமது தலைமையில் சொந்த மண்ணில் கண்டிப்பாக இந்தியாவை வீழ்த்துவோம் என்று கமின்ஸ் சவால் விடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த 2 தொடர்களில் இங்கே நாங்கள் வெற்றிகரமாக செயல்படவில்லை. எனவே இங்கே இந்தியாவுக்கு எதிராக வென்று நீண்ட காலங்கள் ஆகிவிட்டது”

- Advertisement -

சொந்த மண்ணில்:

“இது நம்பிக்கையுடன் அதை திருத்தம் செய்ய வேண்டிய நேரம். நாங்கள் இந்தியாவுக்காக எதிராக பல முறை விளையாடியுள்ளோம். அவர்கள் எங்களை பலமுறை தோற்கடித்துள்ளனர். நாங்களும் அவர்களுக்கு எதிராக நிறைய வெற்றிகளை பெற்றுள்ளோம். எனவே எங்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. கடைசியாக இந்தியாவுக்கு எதிராக பொதுவான சூழ்நிலைகளில் விளையாடிய போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை நாங்கள் வென்றோம்”

இதையும் படிங்க: ஆகஸ்ட் 31 ஃபேப் 4 பிறந்த தினம்.. உண்மையான நியூஸிலாந்து ஜாம்பவான் மார்ட்டின் க்ரோ கணிப்பு

“இது எப்போதும் போட்டி மிகுந்த தொடராக இருக்கும். 10க்கு 10 அடிப்படையில் நான் பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறினார். முன்னதாக இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்திருந்தார். அதே போல போட்டி மிகுந்த அத்தொடரில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்லும் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement