அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றதை தொடர்ந்து முதன்மை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியில் இருந்து வெளியேறினார். அவருடன் சேர்ந்து பேட்டிங் பயிற்சியாளரான விக்ரம் ரத்தோர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே ஆகியோரும் அந்த பதவியில் இருந்து விலகினர்.
புதிய பயிற்சியளர் :
அதனை தொடர்ந்து புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவரது பரிந்துரையின் பெயரில் இந்திய அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக அபிஷேக் நாயரும், புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்னே மோர்கல் நியமிக்கப்பட்டனர்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக அதிகாரவபூர்வமாக செயல்படுவார் என்று ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் அறிவித்துவிட்டது.
இந்நிலையில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்கு இருக்கும் தனது சகோதரரும், முன்னாள் வீரருமான மோர்னே மோர்கலுக்கு அவரது அண்ணன் அல்பி மோர்கல் சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியின் பயிற்சியாளராக இருப்பது மிகப்பெரிய பொறுப்பு.
ஏனெனில் மற்ற அணிகளை விட இந்திய நாட்டில் கிரிக்கெட் மீதான ஆர்வம், காதல் எல்லாம் அளப்பரியது. கடந்த காலத்தில் அந்த அணி செய்துள்ள சாதனைகள் மற்றும் அந்த அணிக்கு ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு என அனைத்துமே மிகப்பெரிய ஒன்று. எனவே மற்ற அணிகளை விட இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி மிகப்பெரிய பதவி. மோர்னே மோர்கல் சிறந்த வீரர்களுடன் பணிபுரிய இருக்கிறார்.
இதையும் படிங்க : அஜய் ஜடேஜா வரிசையில்.. ஸ்ரீதரை முக்கிய பொறுப்பில் நியமித்த ஆப்கானிஸ்தான் வாரியம்.. வெளியான அறிவிப்பு
இந்திய வீரர்களின் திறமையை வெளிக்கொணர உதவுவது மோர்னே மோர்கலின் முக்கியமான பணியாக இருக்கப் போகிறது. அவருக்கு பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் யார் என்பது எனக்கு தெரியாது. ஆனால் ஜாஹீர் கான் அல்லது பும்ரா இருவரில் ஒருவராக இருக்கலாம். பும்ரா போன்ற உலகின் தலைசிறந்த பவுலருடன் பயணிக்க அவர் நிச்சயம் விரும்புவார் என்று அல்பி மோர்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.



