டிஎன்பிஎல் மாதிரி வீரர்களுக்காக பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.. ஐபிஎல் அணிகளுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

Sunil Gavaskar 3
- Advertisement -

ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு தரமான அடுத்த தலைமுறை இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களை கண்டறியும் நோக்கத்தில் துவங்கப்பட்டது. 17 வருடங்கள் கழித்து அது உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏனெனில் உலகக் கோப்பைக்கு நிகராக போட்டிகளைக் கொண்ட ஐபிஎல் தொடரால் பிசிசிஐ கோடிக்கணக்கான ரூபாய்களை வருமானமாக ஈட்டுகிறது.

அதே போல ஐபிஎல் தொடரிலிருந்து ஜெய்ஸ்வால் போன்ற நிறைய இளம் வீரர்களும் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அதைப் பார்த்து தற்போது அனைத்து வெளிநாடுகளும் தங்களுக்கென்று ஒரு புதிய டி20 தொடரை நடத்தி வருகின்றன. இதற்கிடையே இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகா, உத்திர பிரதேசம் போன்ற மாநில வாரியங்கள் பிரத்தியேக டி20 லீக் தொடரை நடத்தி வருகின்றன.

- Advertisement -

கவாஸ்கர் அட்வைஸ்:
குறிப்பாக தமிழ்நாடு வாரியம் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎல் தொடரை நடத்தி வருகிறது. அதிலிருந்து நடராஜன், சாய் சுதர்சன் போன்ற வீரர்களும் சிறப்பாக விளையாடி நாளடைவில் இந்தியாவுக்காக அறிமுகமானார்கள். இந்நிலையில் டிஎன்பிஎல், மகாராஜா கோப்பை, யூபி டி20 போன்ற மாநில வாரியங்கள் நடத்தும் டி20 தொடரிலிருந்து வரும் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும் அதே அளவுக்கு அசத்துவதில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எடுத்துக்காட்டாக யூபி டி20 தொடரில் அசத்திய சமீர் ரிஸ்வி 8.40 கோடிக்கு சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டும் 2024 ஐபிஎல் தொடரில் அசத்தவில்லை. எனவே மாநில டி20 தொடர்களை அடிப்படையாக வைத்து ஐபிஎல் நிர்வாகங்கள் கோடிக்கணக்கில் செலவழித்து வீரர்களை வாங்குவது பணத்தை வீணடிக்கும் செயல் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அண்டர்-19 வீரர்கள் முதல் தர கிரிக்கெட்டில் தடுமாறுவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில் அங்கே ஜூனியர் தொடர்களை விட எதிரணிகளின் தரம் அதிகமாக இருக்கும். அதே போல மாநில டி20 தொடர்களில் அசத்தும் வீரர்கள் சயீத் முஸ்தாக் அலி அல்லது ஐபிஎல் தொடரில் அசத்துவதில்லை. ஏனெனில் அதனுடைய தரம் முற்றிலும் வித்தியாசமானது”

இதையும் படிங்க: இதுவரைக்கும் நான் அந்த கோப்பையை ஜெயிச்சது இல்ல.. அதை இந்தமுறை ஜெயிப்பேன்.. இந்தியா ஜாக்கிரதை – பேட் கம்மின்ஸ்

“அதனால் மாநில டி20 தொடர்களில் ஜொலிக்கும் வீரர்கள் மீது ஐபிஎல் அணிகள் கோடிகளை கொட்டுவது பணத்தை வீணடிக்கும் செயலாகும். விரைவில் துவங்கும் துலீப் கோப்பையில் இந்தியாவின் அனைத்து சர்வதேச வீரர்களும் விளையாட உள்ளனர். அது கண்டிப்பாக உள்ளூரில் விளையாடும் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானவர்களா என்பதை தேர்வாளர்கள் தெரிந்து கொள்வதற்கான சிறந்த வழியாகும்” என்று கூறினார்.

Advertisement