முன்னேற்றத்தை சந்தித்த ரோஹித் சர்மா.. பின்னடைவை சந்தித்த ரவீந்திர ஜடேஜா – வெளியான புதிய தரவரிசை பட்டியல்

Rohit-Jadeja
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது அனைத்து வகையான போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கான தரவரிசையை பட்டியலிட்டு வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் முடிந்த கையோடு புதிய ஒருநாள் போட்டி வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி வெளியிட்டுள்ள இந்த பட்டியல் தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதன்படி வெளியாகிய இந்த ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்களின் ரேங்கிங் பொறுத்தவரை பாகிஸ்தான் அணியை சேர்ந்த நட்சத்திர ஆட்டக்காரரான பாபர் அசாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

- Advertisement -

அதேவேளையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது இடத்திலும், சுப்மன் கில் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். அவர்களை தவிர்த்து நான்காவது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி இடம் பெற்றுள்ளார்.

ஒருநாள் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான கேசவ் மகாராஜ் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்திய அணியின் வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். குல்தீப் யாதவ் நான்காவது இடத்திலும், பும்ரா எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

- Advertisement -

அவர்களை தவிர்த்து வேறுயெந்த இந்திய வீரரும் பந்துவீச்சாளர் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. அதேபோன்று ஒருநாள் போட்டிகளின் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலை பொருத்தவரை ஆப்கானிஸ்தான் அணியின் அனுபவ ஆல்ரவுண்டான முகமது நபி முதல் இடத்தில் உண்டார். இதில் ஒரு ஏமாற்றமான விடயம் யாதெனில் : இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் எந்த ஒரு இந்திய வீரரும் இடம் பிடிக்கவில்லை. இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஜடேஜாவே 16-வது இடத்தை தான் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அடுத்த இன்னிங்க்ஸை ஆரம்பித்த ஹார்டிக் பாண்டியா.. மனைவியை பிறந்த அவரின் அடுத்த காதலி யார் தெரியுமா?

இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணிக்கு அடுத்த ஒரு மாதம் எந்த ஒரு போட்டியுமே இல்லாத வேளையில் அடுத்ததாக இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement