இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா கடந்த 2020-ஆம் ஆண்டு செர்பியாவை சேர்ந்த மாடல் அழகியான நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகஸ்தியா என்கிற ஆண் குழந்தை பிறந்த வேளையில் கடந்த ஜூலை பதினெட்டாம் தேதி இருவரும் திருமண உறவில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.
தனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் இக்கட்டான சூழலை அனுபவித்த அவருக்கு இந்திய அணியின் கேப்டன் பதவியும் மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய அவர் தற்போது ஓய்வுக்காக கிரீஸ் நாட்டிற்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் தனது மனைவியிடம் இருந்து பிரிந்த அவர் தற்போது புதிதாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஜாஸ்மின் வாலியா என்பருடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் பிரிட்டிஷ் ரியாலிட்டி தொலைக்காட்சி ஒன்றில் மூலம் பிரபலம் அடைந்த ஜாஸ்மின் வாலியா தனக்கென ஒரு யூடியூப் சேனலையும் துவங்கி நடத்தி வருகிறார்.
அதோடு பாடகராகவும் இருந்து வரும் அவருக்கு நிறைய ரசிகர்களும் உண்டு என்று கூறப்படுகிறது. ஏனெனில் இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரை ஒருவர் பின் தொடர்வது மட்டுமின்றி புகைப்படங்களுக்கும் லைக் செய்து வருகின்றனர்.
அதோடு இந்திய அணியில் ஹார்டிக் பாண்டியாவை மட்டுமே அவர் பின் தொடர்ந்து வருவதால் அவர்கள் இருவரும் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது கிரீஸ் நாட்டிற்கு பாண்டியா சுற்றுலா சென்றுள்ள வேளையில் ஜாஸ்மின் வாலியாவும் அங்கு இருப்பது இன்னும் ரசிகர்கள் மத்தியில் அதிக கேள்விகளை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : புதிய பவுலிங் பயிற்சியாளராக பதவியேற்ற மோர்னே மோர்கலுக்கு முன் இருக்கும் சவால் – விவரம் இதோ
தனது காதல் மனைவியை பிரிந்த அவர் இப்படி அடுத்த சில மாதங்களிலேயே அடுத்த காதலியுடன் டேட்டிங் செய்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இருவரது தரப்பில் இருந்தும் இந்த உறவு குறித்த எந்த கருத்துகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



